முகப்பு /செய்தி /நாமக்கல் / மரவள்ளி கிழங்கு விலை உயர்வு.. விவசாயிகள் மகிழ்ச்சி!

மரவள்ளி கிழங்கு விலை உயர்வு.. விவசாயிகள் மகிழ்ச்சி!

மாதிரி படம்

மாதிரி படம்

Namakkal tapioca Price hike | நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் மரவள்ளிக்கிழங்கு விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Paramathi, India

நாமக்கல் பரமத்திவேலூர் பகுதிகளில் மரவள்ளி கிழங்கு விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூர், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், சோழசிராமணி, பெருங்குறிச்சியில் மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது.

இப்பகுதிகளில் விளையும் மரவள்ளிக்கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர்.கிழங்கு ஆலைகளில் மரவள்ளிக்கிழங்கில் இருந்து ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர்.

விவசாயிகள் மகிழ்ச்சி: 

மரவள்ளிக்கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள் மரவள்ளிக்கிழங்கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர். கடந்த வாரம் மரவள்ளிக்கிழங்கு டன் ஒன்று ரூ.12,000  விற்பனையானது. தற்போது டன் ஒன்றுக்கு ரூ.1,000 வரை உயர்ந்து ரூ.13,000 விற்பனையாகிறது. அதே போல் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளிக்கிழங்கு கடந்த வாரம் டன் ஒன்று ரூ.12,000  விற்பனையானது. தற்போது டன் ஒன்றுக்கு ரூ.1,000 வரை உயர்ந்து ரூ.13,000 விற்பனையாகிறது. மரவள்ளிக்கிழங்கு வரத்து குறைந்துள்ளதால் மரவள்ளிக்கிழங்கு விலை உயர்ந்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

செய்தியாளர்: ரவிக்குமார், நாமக்கல்.

First published:

Tags: Agriculture, Local News, Namakkal