Home /namakkal /

பயன்படுத்திய பிளாஸ்டிக் கவர்களை ஒப்படைத்தால் பணம் .! தேவனாங்குறிச்சி ஊராட்சியின் முன்னெடுப்பு

பயன்படுத்திய பிளாஸ்டிக் கவர்களை ஒப்படைத்தால் பணம் .! தேவனாங்குறிச்சி ஊராட்சியின் முன்னெடுப்பு

தேவனாங்குறிச்சி ஊராட்சி

தேவனாங்குறிச்சி ஊராட்சி

பிளாஸ்டிக் பைகை ஒழிக்க நாமக்கல் மாவட்டம் தேவனாங்குறிச்சி ஊராட்சி புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் குப்பைகளால் நிலப்பரப்பிலும், நீர் நிலைகளிலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது. இதனைத் தடுக்க வேண்டும் என்று பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர். மேலும் மக்கள் பிளாஸ்டிக் பொருட்களை தேவனாங்குறிச்சி ஊராட்சி மன்றத்தில் ஒப்படைத்தால் பணம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாமக்கல் மாவட்டம் தேவனாங்குறிச்சி ஊராட்சியில் பொதுமக்கள் அனைவரும் மற்றும் கடை வைத்திருக்கும் கடை உரிமையாளர்களும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பிளாஸ்டிக் தடை மற்றும் பிளாஸ்டிக் பயன்படுத்துவது முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பதற்காக ஊராட்சி மன்றம் சார்பாக பள்ளி மாணவர்கள் பங்கேற்று விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.

    பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு


    இந்த விழிப்புணர்வு பேரணியில் மாணவ-மாணவிகள் பிளாஸ்டிக்கை ஒழிப்போம், மஞ்சள் பையைப் பயன்படுத்துவோம், சுற்று சூழல் தீங்கு விளைவிக்காமல் காப்பாற்ற வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பியவாறு ஊரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாகச் சென்று பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

    பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு


    மேலும் ஊராட்சி மன்றம் சார்பாக ஒவ்வொரு கடைகளுக்கு சென்று பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. அறிவிப்பை மீறி பயன்படுத்தினால் கடைகளுக்கும், நிறுவனங்களுக்கும் அபராதம், நிரந்தரத் கடை மற்றும் நிறுவனங்கள் நடத்த அனுமதி மறுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    அதுமட்டுமின்றி பொதுமக்கள் குப்பை வாங்க வரும் பணியாளர்களிடம் பிளாஸ்டிக் தனியாகவும் மக்கும் குப்பை தனியாகவும் கொடுத்து ஊராட்சிக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும், பிளாஸ்டிக் கவர்களை ஊராட்சியில் ஒப்படைத்தால் ஒரு கிலோ பிளாஸ்டிக்கிற்கு ரூபாய் 8 வழங்கப்படும் என்று ஊராட்சி மன்றம் சார்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    செய்தியாளர்: மதன் - நாமக்கல்
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி