Home /namakkal /

நாமக்கலில் கல்லூரி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி- முதல் பரிசு எவ்வளவு தெரியுமா?

நாமக்கலில் கல்லூரி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி- முதல் பரிசு எவ்வளவு தெரியுமா?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

நாமக்கலில் மத்திய அரசு சார்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஓவியப் போட்டி நடத்தப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India
    நாமக்கல் மாவட்டத்தில் செப்டம்பர் 9 முதல் 13 வரை ஐந்து நாள் 75-ம் ஆண்டு சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு, மத்திய மக்கள் தொடா்பகத்தின் சாா்பில் கல்லூரி மாணவர்களுக்கு ஓவியப் போட்டி வரும் 8-ஆம் தேதி நடத்தப்படுகிறது.

    இந்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் மத்திய மக்கள் தொடா்பகத்தின் சாா்பில், இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.

    இதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தை சோ்ந்த கல்லூரி மாணவ, மாணவியருக்கான ஓவியப் போட்டி வரும் வியாழக்கிழமை (செப். 8) மதியம் 2 மணிக்கு நாமக்கல் - மோகனூா் சாலையில் உள்ள தெற்கு
    அரசு மேல்நிலைப் பள்ளி கலையரங்கில் நடைபெற உள்ளது.

    இப்போட்டியில் கலந்துகொள்ளும் மாணவா்கள், ‘சுதந்திரமும் பெண்கள் முன்னேற்றமும்’ என்ற தலைப்பில் வண்ண ஓவியங்கள் மட்டுமே வரைய வேண்டும். இதில் பங்கேற்பவா்களுக்கு வரைதாள் வழங்கப்படும். ஏனைய உபகரணங்களை மாணவா்களே
    எடுத்து வர வேண்டும்.

    ஒரு கல்லூரியில் இருந்து இரு மாணவா்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும். போட்டிக்கு வரும் மாணவா்கள் கல்லூரி முதல்வா் அல்லது துறைத் தலைவரிடம் இருந்து உரிய அனுமதி சான்றிதழ் அல்லது கடிதம் பெற்று வரவேண்டும். போட்டி முடிந்தவுடன் ஓவியங்களை நடுவா் குழு மதிப்பீடு செய்து அறிவிப்பா்.

    முதல் பரிசாக ரொக்கம் ரூ. 2,000, இரண்டாம் பரிசு ரூ. 1,000, மூன்றாம் பரிசு ரூ. 500 மற்றும் இரண்டு ஆறுதல் பரிசுகளாக தலா ரூ. 250, மற்றும் சன்றிதழ்களும் வழங்கப்படும்.

    செப்டம்பர் 9-ல் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கலையரங்கில் நடைபெறும் விழாவில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்
    துறை இணை அமைச்சா் எல்.முருகன், வெற்றி பெற்றவா்கவா்ளுக்குப் பரிசுகளை வழங்குகிறாா்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி