முகப்பு /நாமக்கல் /

சோறு சமைக்க தண்ணி இல்ல.. குடிநீருக்காக சாலை மறியல் செய்த நாமக்கல் குடிசை மாற்று குடியிருப்புவாசிகள்..

சோறு சமைக்க தண்ணி இல்ல.. குடிநீருக்காக சாலை மறியல் செய்த நாமக்கல் குடிசை மாற்று குடியிருப்புவாசிகள்..

X
சாலை

சாலை மறியல்

Namakkal News : நாமக்கல் நகர் பகுதிக்கு உட்பட்ட எஸ்.கே நகரில் குடிசை மாற்று வாரியம் உள்ளது. இங்கு 198 குடும்பங்களை சேர்ந்த சுமார் 600க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல்லில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் 3 மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததை கண்டித்து 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் போராட்டம் செய்தனர்.

நாமக்கல் நகர் பகுதிக்கு உட்பட்ட எஸ்.கே நகரில் குடிசை மாற்று வாரியம் உள்ளது. இங்கு 198 குடும்பங்களை சேர்ந்த சுமார்600 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ஒரு வீட்டிற்கு 150 ரூபாய் என 198 வீடுகளுக்கி மாத மாதம் தனி நபர்கள் சிலர் 3 லட்சம் வரை வசூல் செய்ததாகவும் ஆனால், வசூல் செய்த தொகையினை குடிநீர் வடிகால் வாரியத்திற்கு செலுத்தவில்லை என தெரிகிறது. இதனால் கடந்த 3 மாத காலமாக குடிநீர் விநியோகத்தை வடிகால் வாரியம் துண்டித்துள்ளது. இதன் பின் நாள் ஒன்றுக்கு 300 ரூபாய் வரை செலவு செய்து வெளியில் இருந்து தண்ணீர் வாங்கியுள்ளனர்.

சாலை மறியல் செய்த குடியிருப்புவாசிகள்

எஸ்.கே நகரில் பெரும்பாலானோர் கூலி வேலை செய்து வருவதால் இந்த பிரச்சனை குறித்து பல முறை வடிகால் வாரியத்தை தொடர்பு கொண்டும் எவ்வித பலனும் அளிக்காததால் ஆத்திரமடைந்த எஸ்.கே நகர் பெண்கள், பணத்தை கையாடல் செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு முறையான குடிநீர் வழங்க வேண்டும் என கூறி நாமக்கல் - திருச்சி நெடுஞ்சாலையில் காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதையும் படிங்க : குடும்பத்தோடு போய் என்ஜாய் பன்னுங்க..! குமரியில் களைகட்டிய கோடை பொருட்காட்சி..!

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாமக்கல் போலீசார் அதிகாரிகளுடன் பேசி முறையான குடிநீர் வழங்க வழி வகை செய்வதாக உறுதி மொழி அளித்ததன் அடிப்படையில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. பெண்களின் இந்த போராட்டத்தால் நாமக்கல் - திருச்சி நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மறியல் போராட்டம் நடைபெற்ற போது அங்கிருந்த பெண்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Namakkal