முகப்பு /நாமக்கல் /

தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டி நாமக்கல் லட்சுமி ஹயக்ரீவருக்கு பேனா, பென்சில்களால் மாலை..

தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டி நாமக்கல் லட்சுமி ஹயக்ரீவருக்கு பேனா, பென்சில்களால் மாலை..

X
நாமக்கல்

நாமக்கல் லட்சுமி ஹயக்ரீவருக்கு பேனா, பென்சில்களால் மாலை

Namakkal News | நாமக்கல் நகராட்சி ராமாபுரம் புதூரில் உள்ள ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் ஆலயத்தில் லட்சார்ச்சனை மகாயகத்தை முன்னிட்டு சுவாமிக்கு தங்க கவசம் சாத்தப்பட்டது. 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal, India

லட்சார்ச்சனை மகா யாகத்தை முன்னிட்டு நாமக்கல் ராமாபுரம் புதூரில் உள்ள ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் 408 பேனா. 408 பென்சில் மாலையுடன் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

நாமக்கல் நகராட்சி ராமாபுரம் புதூரில் உள்ள ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் ஆலயத்தில் லட்சார்ச்சனை மகாயாகத்தை முன்னிட்டு சுவாமிக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கும் நிலையில் தேர்வில் மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற வேண்டி 408 பேனா. 408 பென்சிலை மாலையாக அணிவித்து சிறப்பு யாகம் செய்யப்பட்டது.

மேலும் கோவில் வளாகத்தில் உள்ள சக்கரத்தாழ்வாரும் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்ச்சியில், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்து பேனா, பென்சிலை பிரசாதமாக வாங்கிச் சென்றனர்.

First published:

Tags: Local News, Namakkal