Home /namakkal /

நாமக்கல் இளைஞர்களே.. வேலை இல்லாதோருக்கு உதவித்தொகை - விவரங்கள் இதோ!

நாமக்கல் இளைஞர்களே.. வேலை இல்லாதோருக்கு உதவித்தொகை - விவரங்கள் இதோ!

நாமக்கல்

நாமக்கல்

Namakkal District News : நாமக்கல் மாவட்டத்தில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எந்தவிதமான வேலைவாய்ப்பும் கிடைக்கப் பெறாமல் 5 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது.

    நாமக்கல் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் வேலைக்கு காத்திருப்பவர்களுக்கு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எந்தவிதமான வேலைவாய்ப்பும் கிடைக்கப் பெறாமல் 5 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதற்காக, பத்தாம் வகுப்பு தேர்ச்சி   பெறாதவர்களுக்கு மாதம் ரூபாய் 200 மற்றும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூபாய் 300 வழங்கப்பட உள்ளது. மேல்நிலைக்கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூபாய் 400 மற்றும் பட்டதாரிகளுக்கு ரூபாய் 600 மூன்று ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

    மேலும் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மாதம் ஒன்றுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூபாய் 600, மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூபாய் 750 மற்றும் பட்டதாரிகளுக்கு ரூபாய் 1000 வீதம் பத்து ஆண்டுகளுக்கு வேலை இல்லாமல் உள்ளவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

    கல்வித்தகுதிகளை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவடைந்தவர்கள் மற்றும் பதிவு செய்து ஓராண்டு முடிவுற்ற அனைத்து மாற்றுத்திறனாகளும் தகுதியுள்ளவர்கள்.

    மேலும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், மற்றவர்கள் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் 72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு வருமான வரம்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேற்கண்ட தகுதியுடையவர்கள் உடனடியாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் செல்லலாம். மேலும் www.tnvelaivaaippu.gov.in. என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம்.

    செய்தியாளர்: மதன்குமார், நாமக்கல்
    Published by:Arun
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி