ஹோம் /நாமக்கல் /

நாமக்கலில் இப்படி ஒரு சுற்றுலா இடமா..? குடும்பத்துடன் குதூகலிக்கலாம்..!

நாமக்கலில் இப்படி ஒரு சுற்றுலா இடமா..? குடும்பத்துடன் குதூகலிக்கலாம்..!

ஜேடார்பாளையம் தடுப்பணை

ஜேடார்பாளையம் தடுப்பணை

Namakkal District News : நாமக்கல் மாவட்டத்திலே குளித்து மகிழவும் காவிரி ஆற்று  நீரில் இறங்கி விளையாடவும் , பார்க்கில் விளையாடவும் ஏற்ற இடமாகவும் இந்த ஜேடார்பாளையம் தடுப்பணை உள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டத்தில் குளித்து மகிழ, காவிரி ஆற்று நீரில் இறங்கி விளையாட, பார்க்கில் விளையாட ஏற்ற இடமாகவும், இந்த ஜேடார்பாளையம் தடுப்பணை உள்ளது. இந்த இடத்துக்கு நீங்கள் குடும்பத்துடனும் செல்லலாம்.

ஈரோடு - பரமத்திவேலூர் செல்லும் வழியில் 30 கி.மீ. தொலைவிலும், திருச்செங்கோடு - பரமத்திவேலூர் செல்லும் வழியில் 35 தொலைவிலும் இந்த ஜேடார்பாளையம் தடுப்பணை உள்ளது.

பஸ், கார், பைக்களிலும், தனியார் ஆம்னி பஸ்களையும் வாடகைக்கு எடுத்துக்கொண்டும் செல்லலாம். ஜேடார்பாளையம் தடுப்பணையில் உள்ள நுழைவாயில் வந்தவுடன் அனுமதி சீட்டு வாங்க வேண்டும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரூ.5ம், இரு சக்கர வாகனத்துக்கு ரூ.10ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பூங்காவும் இருக்கிறது.

ஜேடார்பாளையம் தடுப்பணை

இதையும் படிங்க : நாமக்கல் மாவட்ட மக்களே... உங்களிடம் இருக்க வேண்டிய முக்கிய போன் நம்பர்கள் இவை!

இந்த தடுப்பணை வழியாக காவிரி ஆற்று நீர் செல்கிறது. கோடை காலத்திற்கு ஏற்ற இடமாகவும் இருக்கிறது. இந்த இடத்திற்கு குடும்பத்துடனும் தனியாகவும், ஜோடியாகவும் செல்ல முடியும். காவிரி ஆற்று நீரில் ஜாலியாக குளித்தும் வெப்பத்தையும் தணித்துக் கொள்ள முடியும். கூட்டமாகவும் குதூகலிக்கலாம். குளித்து முடித்த பிறகு, நீங்கள் மாற்று உடைகளை அணிந்து பூங்காபகுதிக்கு செல்லலாம்.

ஜேடார்பாளையம் தடுப்பணை

சிறியவர்கள் விளையாடுவதற்கு ஏற்றது போல் இருக்கிறது பூங்கா. மேலும், மர நிழல்களில் நீங்கள் அமர்ந்தும் ஓய்வெடுக்கலாம். உணவு பொருள்கள் வாங்கிக் கொண்டு வந்ததால், இந்த பார்க்கில் வந்து அமர்ந்து சாப்பிட்டு விட்டு செல்லலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ஜேடார்பாளையம் தடுப்பணை

பார்க் பகுதிக்கு செல்ல எந்த விட கட்டணமும் நீங்கள் செலுத்த தேவையில்லை. ஒரு முறை நுழைவு சீட்டை பெற்றுவிட்டாலே போதும், நீங்கள் பார்க் மற்றும் அணை பகுதிக்கும் செல்ல முடியும். வாகனத்திற்கு தனியாக பார்க்கிங் கட்டணம் செலுத்தி விட்டு, ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Namakkal