Home /namakkal /

Namakkal | இடைத் தேர்தலை முன்னிட்டு நாமக்கலில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

Namakkal | இடைத் தேர்தலை முன்னிட்டு நாமக்கலில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

டாஸ்மாக் கடை

டாஸ்மாக் கடை

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் முன்னிட்டு தேர்தல் நடக்கும் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் மதுபான கடைகளை மூட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடக்கும் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் மதுபான கடைகளை மூட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள, ஒரு டவுன் பஞ்சாயத்து, கவுன்சிலர், ஒரு யூனியன் கவுன்சிலர், ஒரு கிராம பஞ்சாயத்து, தலைவர் மற்றும் 13 பஞ்சாயத்து, வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு வரும் 9ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 5 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதியுள்ள 11 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதற்காக 34 பேர் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனு விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது.

    இதனிடையே, ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடைத்தேர்தல் நடப்பதால் தேர்தல் நடக்கும் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்தல் வாக்குப்பதிவு நடக்கும் இடங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள, 5 கிலோமீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள மதுபான கடைகள் இன்று காலை 10 மணி முதல் வருகின்ற 9 நள்ளிரவு 12 மணி வரை மூட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் வாக்கு எண்ணிக்கை நாளான 12ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடக்கும் பகுதி மற்றும் அப்பகுதியில் இருந்து 5 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள இந்திய தயாரிப்பு, அயல்நாட்டு மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள் மூடவேண்டும். அதுமட்டுமின்றி, மேற்கண்ட நாட்களில் டாஸ்மாக் கடைகள், மதுக்கூடங்களை திறந்தாலோ அல்லது மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    செய்தியாளர்: மதன், நாமக்கல்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி