ஹோம் /நாமக்கல் /

Pongal 2023 : பொங்கல் வசூலை அள்ளியது.. நாமக்கல் ஆட்டுச்சந்தையில் இத்தனை கோடி வரை வியாபாரமா?

Pongal 2023 : பொங்கல் வசூலை அள்ளியது.. நாமக்கல் ஆட்டுச்சந்தையில் இத்தனை கோடி வரை வியாபாரமா?

X
நாமக்கல்

நாமக்கல் ஆட்டுச்சந்தை

Namakkal Goat Market : நாமக்கல் ஆட்டுச் சந்தையில் பொங்கல் பண்டிகைக்கு ஏராளமான ஆடுகள் விற்பனையானது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல்லில் வாரந்தோறும் சனிக்கிழமை ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். இச்சந்தைக்கு நாமக்கல், புதன்சந்தை, சேந்தமங்கலம், இராசிபுரம், எருமப்பட்டி, வலையப்பட்டி, மோகனூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும், விவசாயிகளும் தாங்கள் வளர்க்கும் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருவர். இங்கே விற்பனைக்காக கொண்டு வரும் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் தரமாகவும் ஆரோக்கியத்துடனும் காணப்படுவதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வரும் வியாபாரிகள் இங்கு ஆடுகளை வாங்கி செல்கின்றனர்.

இந்நிலையில், இன்று நாமக்கல்லில் ஆடுகள் சந்தை நடைப்பெற்றது. அதில் நாமக்கல் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து வெள்ளாடு, செம்மறி ஆடு, குரும்பை ஆடுகள் என மொத்தம் 40 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தது. நாளை பொங்கல் பண்டிகை என்பதால் இன்று நடைபெற்ற சந்தையில் இறைச்சிக்காக அதிகளவு ஆடுகள் விற்பனையானது. இதில் ஒரு ஜோடி ஆடு, குறைந்தபட்சம் 12 ஆயிரம் ரூபாயிலிருந்து அதிகப்பட்சமாக 25,000 ரூபாய் வரை விலை போனது.

ஆட்டுக் குட்டியானது 500 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை விலை போனது. இதனால் ஆடுகள் நல்ல விலை போனதால் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் இன்று நடைபெற்ற சந்தையில் சுமார் 3 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெற்று உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

First published:

Tags: Local News, Namakkal, Pongal 2023