Home /namakkal /

விநாயகர் சதுர்த்தி விழா- நாமக்கலில் 500-க்கும் மேற்பட்ட சிலைகள் வைத்து பக்தர்கள் வழிபாடு

விநாயகர் சதுர்த்தி விழா- நாமக்கலில் 500-க்கும் மேற்பட்ட சிலைகள் வைத்து பக்தர்கள் வழிபாடு

விநாயர் சிலை

விநாயர் சிலை

நாமக்கல் மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் சிலைகள் வைத்து பக்தர்கள் வழிபாடு செய்துவருகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Namakkal, India
    நாமக்கல் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காலை முதலே விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்து பக்தர்கள் வழிபாடுகள் நடத்தினர்.

    இந்தியாவில் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இதற்கென இந்தியாவில் தனி ஒரு வரலாறு உண்டு.

    கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபட தடைவிதிக்கப்பட்டிருந்தது. விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் தடைச் செய்யப்பட்டது. இதனால் மக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைப்பதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.

    விநாயகர் சிலை


    தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு பின் கொரோனா பரவல் குறைந்து உள்ளதால் விநாயகர் சதுர்த்தி விழாவை மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இதற்காக நாமக்கல் மாவட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ள இடங்களில் மக்கள் விநாயகர் சிலைகளை நிறுவி, ஊர்வலமாக எடுத்துச்சென்று நீர்நிலைகளில் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    இதனால் மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் மக்கள் தாங்கள் இருக்கும் பகுதியில் வைத்து கண் திறப்பு நிகழ்ச்சி, சிறப்பு பூஜைகள் மற்றும் விநாயகருக்கு பிடித்த உணவுகளை செய்து வழிபட்டனர்.

    இதில் குறிப்பாக பரமத்தி வேலூரிலுள்ள விநாயகர் கோயிலில் சிறப்பு ஹோமம், வலம்புரி சங்கு பூஜைகள் என வெகு விமரிசையாக நடைபெற்றது. மேலும் நாமக்கல் சந்தைப்பேட்டை புதூரில் அமைந்துள்ள செல்வ விநாயகர் கோயிலில் 5 விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    இதேபோல் திருச்செங்கோடு பகுதிகளில் உள்ள முக்கிய விநாயகர் கோயில் மற்றும் ஆபத்து காத்த விநாயகர் ஆலயத்தில் விநாயகருக்கு, நல்லெண்ணை, திருமஞ்சள், பால், தயிர், நெய், பஞ்சாமிர்தம் கொண்டு அபிஷேகம் நடைபெற்று தொடர்ச்சியாக பூஜைகளும் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    மேலும் பல்வேறு பகுதிகளில் 1 அடி முதல் 10 பத்து அடி வரையிலான விநாயகர் சிலைகள் வைத்து சிறப்பு வழிபாடுகளும் நடத்தினர். இதனிடையே நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்து வருவதால் சிலைகள் வைத்து உள்ளவர்கள் சற்று கலக்கம் அடைந்துள்ளனர்.

    செய்தியாளர்: மதன், நாமக்கல்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி