Home /namakkal /

காவிரி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம்: வீடுகளுக்குள் புகுந்த நீர்- புகைப்படத் தொகுப்பு

காவிரி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம்: வீடுகளுக்குள் புகுந்த நீர்- புகைப்படத் தொகுப்பு

நாமக்கல் வெள்ள பாதிப்பு

நாமக்கல் வெள்ள பாதிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கரையோர பகுதியில் வெள்ள நீர் புகுந்தது பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் குறித்து புகைப்படங்கள் தொகுப்பு.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India
    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கரையோர பகுதியில் வெள்ள நீர் புகுந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.


    காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணையில் திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் காவிரி ஆற்றில் கரைகளை தாண்டி சென்றதால் நாமக்கல் மாவட்டம் கரையோர பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.


    அங்கிருந்து மக்கள் 1500க்கும் மேற்பட்டோர் 14 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேட்டூர் அணை நிரம்பியதையடுத்து வினாடிக்கு 2 லட்சம் கன அடி நீர் 16 கண் வழியாக திறந்து விடப்பட்டது.


    இதனால் காவிரி ஆற்றில் பெரிதளவில் வெள்ளம் ஏற்பட்டு காவிரி பாலத்தை ஒட்டிக்கொண்டு தண்ணீர் ஆர்ப்பரித்து கொண்டு சென்றது. மேலும் காவிரி கரையோர பகுதியில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது.


    குறிப்பாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காவிரி கரையோர பகுதிகளான குமாரபாளையம், பள்ளிபாளையம், கொக்கராயன் பேட்டை, சோழசிராமணி, பரமத்தி வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.


    இதனையடுத்து 560 வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. மேலும் வெள்ள நீர் இரு கரைகளை தாண்டி சென்றதால் கரையோர மக்கள் பெரிதளவில் பாதிப்பு அடைந்தனர்.


    அங்கு தங்கி இருந்த மக்கள் மீட்டு நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் கரையோர மக்கள் இயல்பு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.


    வீடுகளைச் சூழ்ந்த வெள்ளநீர்


    வீடுகளுக்குள் புகுந்த வெள்ளநீர் | செய்தி மற்றும் புகைப்படங்கள்: மதன்
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி