Home /namakkal /

இளைஞர்களுக்கு இலவச இயற்கை முறை வேளாண் பயிற்சி- முழு விவரம் இதோ

இளைஞர்களுக்கு இலவச இயற்கை முறை வேளாண் பயிற்சி- முழு விவரம் இதோ

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

நாமக்கலில் இயற்கை வேளாண்மை குறித்து இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க நாமக்கல் மாவட்ட வேளாண்துறை முயற்சி எடுத்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India
    விவசாயத்தில் ரசாயன முறை வேளாண்மையை தவிர்த்து, இயற்கை முறை வேளாண்மையை மேற்கொள்ளும் நடைமுறைகள் குறித்து, இளைஞர்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது. இதில் எவ்வாறு இளைஞர்கள் சேரலாம் என்று பார்க்கலாம்.

    தற்போது, நவீன காலத்தில் பெரும்பாலும் ரசாயண முறை வேளாண்மை மேற்கொள்ளப்படுகிறது. இதைத் தவிர்த்து, இயற்கை முறை வேளாண்மையை நடைமுறைப்படுத்தும் வகையில் ஊரக இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

    தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் உழவா் பயிற்சி நிலையம் சாா்பில் நாமக்கல் மாவட்ட வேளாண்மை உழவா் நலத்துறை மூலம் கிராமப்புற இளைஞா்களுக்கு அங்கக உற்பத்தியாளா் என்ற தலைப்பில் ஒரு மாத இலவச பயிற்சி மாவட்ட வேளாண்மை இணைஇயக்குநா் அலுவலக கூட்ட அரங்கில் நடக்கிறது.

    வேளாண்மையில் ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகள், களைக்கொக்ல்லிகளை தவிா்த்து வருங்கால சந்ததியினரின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது, வேளாண் உற்பத்தியை
    நிலைப்படுத்துவது முக்கிய தேவையாக உள்ளது.

    ரசாயன முறை வேளாண்மை தவிா்த்து, இயற்கை முறை வேளாண்மையில் ஆா்வமுள்ள ஊரக இளைஞா்கள் தங்களது 2 பாஸ்போா்ட் அளவு புகைப்படம், ஆதாா் எண், வங்கி புத்தக நகல் மற்றும் குறைந்த பட்ச கல்வித் தகுதியாக 10-ம் வகுப்பு தோ்ச்சிக்கான கல்விச் சான்றிதழ் ஆகிய ஆவணங்களுடன்
    வரும் செப்டம்பர் 6-ம் தேதிக்குள் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகங்களில் பதிவு செய்து கொண்டு இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம் என்று நாமக்கல் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் பொ.அசோகன் தெரிவித்துள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி