Home /namakkal /

நாமக்கலில் பாரம்பரிய நெல் விதைகள் 50% மானியத்தில் விற்பனை

நாமக்கலில் பாரம்பரிய நெல் விதைகள் 50% மானியத்தில் விற்பனை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

நாமக்கலில் மரபுசார் நெல் ரகங்களை 50 சதவீதம் மானியத்தில் அளிப்பது குறித்து வேளாண்மைத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Paramathi, India
    பாரம்பரியம் மிக்க மரபுசார் நெல் ரகங்கள் 50 சதவீதம் மானியத்தில் விற்பனை செய்யபப்படும் என்று நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாட்டில் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுப்பதற்காக நெல் ஜெயராமனின் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத் திட்டத்தின் கீழ் பாரம்பரிய விதை நெல்லான கருப்புக்கவுணி மற்றும் தூயமல்லி ரகங்கள் பரமத்தி வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு வரவுள்ளது.

    அதே சமயம் விதை நெல் தேவைப்படும் விவசாயிகள் 50 சதவீத மானிய விலையில் பெற்று பயன் பெறலாம். மேலும் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் விதை நெல்லான டி.கே.எம்-13 மற்றும் ஆர்.என்.ஆர்-15048 ரகங்கள் போதிய அளவு இருப்பில் உள்ளது.

    இந்த விதை நெல் தேவைப்படும் விவசாயிகள் இதனையும் 50 சதவீத மானிய விலையில் பெறலாம். மேலும் விபரங்களுக்கு அந்த அந்த பகுதியிலுள்ள உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டோ அல்லது பரமத்தி வேளாண்மை விரிவாக்க மையத்தினை அணுகியோ பயன் பெறலாம் என்று பரமத்திவேலூர் வேட்டார வேளாண்மை உதவி இயக்குநகர் கோவிந்தசாமி தெரிவித்துள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி