ஹோம் /நாமக்கல் /

நாமக்கல் விவசாயிகளே... பிரதமரின் கிசான் நிதியைப் பெற கேஒய்சி அவசியம்... இதுதான் கடைசி தேதி

நாமக்கல் விவசாயிகளே... பிரதமரின் கிசான் நிதியைப் பெற கேஒய்சி அவசியம்... இதுதான் கடைசி தேதி

பிரதமரின் கிசான் நிதி

பிரதமரின் கிசான் நிதி

Namakkal District | பிரதமரின் கிசான் நிதியை  தொடர்ந்த பெற கேஒய்சி செய்து கொள்ள நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான கடைசி தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு, பிரதமரின் கிசான் நிதியை தொடர்ந்து பெற கேஒய்சி செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான  கடைசி தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பிரதமரின் கிசான் கவுரவ நிதி ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் நிலமுள்ள, தகுதியுள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2000 வீதம், ஆண்டிற்கு ரூ.6000 வேளாண் இடு பொருட்கள் மற்றும் செலவி னங்களை மேற்கொள்ள அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது.

இதுவரை இத்திட்டத்தில் விவசாயிகள் இணைந்த தேதியின் அடிப்படையில் 12 தவணைகள் தொகை விடுவிக்கப்பட்டு விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் தவணை தொகை விடுவிப்பிற்கு ஆதார் விபரங்கள் சரிபார்ப்பு அவசியம் என அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பிரதம மந்திரி கிசான் கவுரவ நிதி ஊக்கத்தொகை பெறுகின்ற கபிலர்மலை விவசாயிகள் அருகிலுள்ள அரசு பொது சேவை மையங்களையோ, தபால் அலுவலகங்களையோ அணுகி ஆதார் அட்டை மற்றும் தொலைபேசி கொண்டு தங்களுடைய இருப்பு மற்றும் தொலைபேசி எண் மாற்றம் போன்ற விபரங்களை கைவிரல் ரேகையை பதிவு செய்வதன் வழியாக புதுப்பித்து 10.12.2022- க்குள் இ-கே.ஒய்.சி செய்துகொள்ள வேண்டும்.

Must Read : இந்த பேருந்திற்கு பெட்ரோல், டீசல் ஊற்ற தேவையில்லை - திருப்பூரில் புதிய முயற்சி

அவ்வாறு கைவிரல் பதிவேற்றம் செய்து இ-கே ஒய்சி மூலம் புதுப்பித்தால் மட்டுமே விவசாயிகளுக்கு தொடர்ந்து ஊக்கத்தொகை கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Agriculture, Local News, Namakkal, PM Kisan