Home /namakkal /

அறநிலையத்துறை சார்பில் சீர்வரிசையோடு இலவச திருமணம்- நாமக்கலில் அறிவிப்பு

அறநிலையத்துறை சார்பில் சீர்வரிசையோடு இலவச திருமணம்- நாமக்கலில் அறிவிப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

நாமக்கல் மாவட்டத்தில் இந்து அறநிலையத்துறை சார்பில் தம்பதிகளுக்கு இலவசத் திருமணம் நடத்திவைக்கப்படவுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India
    இந்து சமய அறநிலையத்துறை சார்பில், தமிழகத்தில் அவ்வப்போது, இலவச திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. மேலும், அப்போது, மணமகன்-மணமகள் ஆகியோருக்கு இலவச சீர் வரிசைகளும் வழங்கப்படுகிறது.

    இந்த திருமணத்தில் பங்கே ஆண்-பெண் இருபாலரும் முன்பதிவு செய்திருக்க வேண்டும். அப்படி செய்தவர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில், அவர்களுக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்படுகிறது.

    இதில், நாமக்கல் மாவட்டத்தை சோ்ந்த திருமணமாகாத ஆண், பெண் இருவரும் அறநிலையத் துறை நடத்தும் இலவச திருமணத்துக்கு விண்ணப்பிக்கலாம் என
    அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் ஆஞ்சநேயா் கோயில் முன்பாக இலவச திருமணம் தொடா்பான விவரங்களை வெளியிட்டுள்ளது கோயில் நிா்வாகம்.

    நாமக்கல், ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கிய ஈரோடு இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் அலுவலகத்திற்கு உள்பட்ட 25 இணையருக்கு திருமணம் செய்து வைக்கபட இருக்கிறது.

    திருமணத்தின் போது மணமக்களுக்கு தங்க திருமாங்கல்யம் (2 கிராம்), மணமக்களுக்கான புத்தாடை, மணமகன், மணமகள் வீட்டாருக்கு விருந்து உணவு, சீா்வரிசை பாத்திரங்கள்,
    பூமாலை, புஷ்பங்கள் ஆகியவை இலவசமாக வழங்கப்பட இருக்கின்றது.

    இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புபவா்கள் நாமக்கல் ஆஞ்சநேயா் கோயில் நிா்வாக அலுவலகத்தை அணுகி கூடுதல் விபரங்களை பெற்றுக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி