Home /namakkal /

தாழ்வான மின்கம்பிகளால் விபத்து ஏற்படும் அபாயம் - உடனடியாக சீரமைக்க மக்கள் கோரிக்கை.!

தாழ்வான மின்கம்பிகளால் விபத்து ஏற்படும் அபாயம் - உடனடியாக சீரமைக்க மக்கள் கோரிக்கை.!

தாழ்வாக செல்லும் மின் கம்பி..

தாழ்வாக செல்லும் மின் கம்பி..

Namakkal District | நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அருகே மின் கம்பம் சாய்ந்த நிலையிலும் மற்றும் தாழ்வான நிலையில் செல்லும் மின் கம்பிகளால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் மின் கம்பியில் உரசி விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    நாமக்கல் மாவட்டம் எலச்சியபாளையம் அருகே மரப்பம்பாளையம் டூ இலுப்புலி செல்லும் வழியில் தாழ்வான நிலையில் கீழே தொங்கியபடி செல்லும் மின் கம்பியால் விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது. இந்த வழியாக செல்லும் வாகனங்கள் மற்றும் சரக்குகள் ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்கள் செல்லும் போது மின் கம்பியில் உரசி விபத்து உள்ளாகும் வகையில் தாழ்வான நிலையில் சாலையின் குறுக்கே மின்கம்பிகள் செல்கின்றன.

    மேலும் சாலையின் இருபக்கமும் நடப்பட்டுள்ள மின்கம்பங்கள் குறைவான உயரம் கொண்டவையாக உள்ளது.
    இந்த கம்பத்தின் மூலம் இப்பகுதியில் உள்ள குடியிருப்புகள் மின்சார வசதிகள் பயன்பெற்று வருகின்றன. தற்போது கீழே தொங்கிய‌படி மின்கம்பிகள் இருப்பதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    அதுமட்டுமின்றி மின்கம்பம் சாய்ந்த நிலையில் நிற்கிறது. இதனால் அப்பகுதியில் பலத்த காற்று வீசும் போது மின்கம்பிகள் அறுந்து விழும் நிலையில் வலுவிழந்து காணப்படுகிறது. மேலும் இந்த தாழ்வான நிலையில் செல்லும் மின்கம்பிகள் மற்றும் சாய்ந்த நிலையில் நிற்கும் மின்கம்பம் கடந்த சில நாட்களாகவே சரிச் செய்யப்படாமல் இருப்பதாக கூறுகிறார்கள்.

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இங்கு எந்தவொரு அசம்பாவிதமும் நடை‌பெறுவதற்கு முன் இதனை விரைந்து கவனித்து சரிசெய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

    செய்தியாளர்: மதன் - நாமக்கல்
    Published by:Arun
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி