Home /namakkal /

நாமக்கலில் முட்டை விலை அதிகரிப்பு-பொது மக்கள் கலக்கம்

நாமக்கலில் முட்டை விலை அதிகரிப்பு-பொது மக்கள் கலக்கம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

நாமக்கலில் ஒரு முட்டையின் விலை 4 ரூபாயிலிருந்து 4.20 ரூபாயாக அதிகரித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    நாமக்கலில் முட்டை விலை சற்று உயர்ந்ததால், வாடிக்கையாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். மேலும், தற்போது 20 பைசா அதிகரித்துள்ளதால், ரூ. 4.20 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி.) கூட்டம் நடந்தது. இதில், ஏற்கனவே ரூ. 4 ஆக இருந்த ஒரு முட்டையின் விலை 20 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.20 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில் முட்டை மொத்த விற்பனையாளர்களுக்கு வழங்க வேண்டிய மைனஸ் விலை 30 பைசாவாக நெஸ்பாக் அறிவித்துள்ளது. இதனால் பண்ணையாளர்களுக்கு ஒரு முட்டைக்கு ரூ. 3.90 கிடைக்கும்.

    முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) வருமாறு: சென்னை 425, பர்வாலா 400, பெங்களூர் 405, டெல்லி 422, ஹைதராபாத் 385, மும்பை 435, மைசூர் 415, விஜயவாடா 402, ஹெஸ்பேட் 370, கொல்கத்தா 475. பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.94 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 95 ஆக பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

    மேலும், முட்டை விலை உயர்வு சற்று ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மத்தியில் கலக்கத்தையும் ஏற்படுத்தயுள்ளது.

    தற்போது, ஜிஎஸ்டியால் அரிசி மூட்டையும், காய்கறி, பெட்ரோல் டீசல், பழங்கள் என விலை அதிகரித்துள்ளது. மேலும், மக்கள் வாங்கும் உணவு பண்டங்களும் திண்பண்படங்களும் விலை அதிகரித்துள்ளதால் பொது மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி