ஹோம் /நாமக்கல் /

நாமக்கலில் உயர்த்தப்பட்ட முட்டையின் விலை- எவ்வளவு தெரியுமா?

நாமக்கலில் உயர்த்தப்பட்ட முட்டையின் விலை- எவ்வளவு தெரியுமா?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

நாமக்கலில் முட்டையின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதனால் கடைகளில் முட்டையின் விலை உயரும்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் மண்டல ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், முட்டை விலை நிா்ணயம் தொடா்பாக பண்ணையாளா்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன.

  நாமக்கல் மண்டலத்தில், சந்தை மற்றும் விலை நிலவரத்திற்கு ஏற்ப வாரத்திற்கு ஒரு முறை முட்டை விலை நிர்ணயம் செய்ய பண்ணையாளர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடக்கிறது. இதன்பிறகே முட்டை விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

  இதையொட்டி, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 20 காசுகள் உயா்த்தப்பட்டு ரூ.4.50-ஆக நிா்ணயிக்கப்பட்டது.

  தமிழகத்தில் ஆடி மாதம் முடிவடையும் நிலையில் விற்பனை சற்று அதிகரித்து வருகிறது. அதேபோல தமிழகம், கேரளாவில் முட்டைக்கான தேவை அதிகரித்துள்ளதால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. முட்டை விலை மேலும் உயர வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும், பல்லடத்தில் நடந்த, தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முட்டைக் கோழி விலை கிலோ ரூ.91-ஆகவும், கறிக்கோழி விலை கிலோ ரூ.110-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டது.

  Published by:Karthick S
  First published:

  Tags: Local News, Namakkal