முகப்பு /நாமக்கல் /

நாமக்கல் முட்டை விலை அதிரடியாக உயர்வு.. பொதுமக்கள் அதிர்ச்சி!

நாமக்கல் முட்டை விலை அதிரடியாக உயர்வு.. பொதுமக்கள் அதிர்ச்சி!

X
முட்டை

முட்டை

Namakkal egg price | முட்டை கொள்முதல் விலை 465 காசுகளாக உயர்ந்து உள்ளது. இதேபோல் ஏற்றுமதி ரக முட்டையின் கொள்முதல் விலை 455 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர்.

நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 8 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) கடந்த 1ம் தேதி முதல் பண்ணையில் ரொக்க விற்பனைக்கு மைனஸ் இல்லாத விலையை நாள்தோறும் அறிவித்து வருகிறது. கடந்த 8ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை ரூ. 4.45 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. ஏற்றுமதிக்கான முட்டை விலை ரூ. 4.35 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

முட்டை விலை 15 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் மைனஸ் இல்லாதபண்ணைக்கொள்முதல் விலை ரூ. 4.60 ஆகவும், எக்ஸ்போர்ட் முட்டை விலை ரூ. 4.50 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோழிப்பண்ணையாளர்கள், முட்டை வியாபாரிகளுக்கு விற்பனை முட்டை விற்பனை செய்யும்போது, ஏற்கனவே என்இசிசி விலையில் இருந்து முட்டை விலையை குறைத்து விற்பனை செய்தனர். இனி அவ்வாறு செய்யத்தேவையில்லை. முட்டை வியாபாரிகளுக்கும் என்இசிசிக்கும் இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், பண்ணையாளர்கள் முட்டையை மைனஸ் விலைக்கு விற்கத் தேவையில்லை என்று என்இசிசி அறிவித்துள்ளது.

கோழிவிலை: பிராய்லர் கோழி உயிருடன் ஒருகிலோ ரூ.106 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 86 ஆக சிகா நிர்ணயித்துள்ளது.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Egg, Local News, Namakkal