ஹோம் /நாமக்கல் /

நாமக்கல் மின்வாரிய அலுவலகம் இடமாற்றம் - இப்போது எங்கிருக்கிறது தெரியுமா?

நாமக்கல் மின்வாரிய அலுவலகம் இடமாற்றம் - இப்போது எங்கிருக்கிறது தெரியுமா?

மின்சார வாரியம்

மின்சார வாரியம்

Namakkal EB Office | நாமக்கல் மின்வாரிய அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய அலுவலகம் அமைந்துள்ள பகுதி பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மின்வாரிய அலுவலகம் வாடகை கட்டடத்தில் இயங்கி வந்த நிலையில், தற்போது புதிய, சொந்த கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் நாகராஜன் அது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில், தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், நாமக்கல் கோட்டம், வளையப்பட்டி உபகோட்டம், மேற்கு நாமக்கல் பிரிவு மின்வாரிய அலுவலகம், கொண்டிசெட்டிப்பட்டியில் வாடகை கட்டடத்தில் இயங்கி வந்தது.

Must Read : பொள்ளாச்சி ‘சூர்யவம்சம்’ வீட்டில் ஷூட் செய்யப்பட்டு மாபெரும் ஹிட்கொடுத்த படங்களின் லிஸ்ட்!

தற்போது, இந்த அலுவலகம், நாமக்கல்-பரமத்தி சாலை, அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே, நாமக்கல் துணை மின் நிலைய வளாகத்தில், புதிதாக கட்டப்பட்ட கட்டடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதனால், மின் நுகர்வோர்கள், மின் கட்டணம் மற்றும் இதர மின் வாரிய சேவைகளுக்கு, இந்த புதிய அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது. எனவே, இன்று முதல் நாமக்கல் மக்கள் புதிய அலுவலத்திற்கு சென்று சேவைகளைப் பெற்று மகிழுங்கள்.

Published by:Suresh V
First published:

Tags: EB Bill, Local News, Namakkal