Home /namakkal /

Namakkal | கொக்கராயன் பேட்டை ரயில்வே கேட் மூடல்: வழி இல்லாமல் வாகன ஓட்டிகள் தவிப்பு!

Namakkal | கொக்கராயன் பேட்டை ரயில்வே கேட் மூடல்: வழி இல்லாமல் வாகன ஓட்டிகள் தவிப்பு!

நாமக்கல் ரயில்வே கேட்

நாமக்கல் ரயில்வே கேட்

Namakkal | கொக்கராயன் பேட்டை லக்காபுரம் ரயில்வே கேட் மூடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

    நாமக்கல் மாவட்டம் கொக்கராயன் பேட்டை லக்காபுரம் ரயில்வே கேட் பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டுள்ளதால் அவ்வழியாக தினசரி சென்று கொண்டிருந்த வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றன.

    நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்ட எல்லைப் பகுதிகளான கொக்கராயன் பேட்டை மற்றும் லக்காபுரம் ரெயில்வே கேட் பராமரிப்பு பணிகளுக்காக 01.07.22 முதல் 06.07.22 அன்று மாலை 6.00 மணி வரை மூடப்படும் அறிவிக்கப்பட்டு தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த வழியாக தினந்தோறும் ஏராளமான கனரக வாகனங்கள் சென்றுவரும். ஏனென்றால் நகரத்திற்குள் வராமல் செல்ல வேண்டும் என்றால் இந்த வழியாகத்தான் வாகனங்கள் செல்ல வேண்டும்.

    தற்போது பள்ளிபாளையம் பகுதியில் மேம்பாலம் பணிகள் நடைபெற்று வருவதால் திருச்செங்கோடு டூ ஈரோடு செல்லும் கனரக வாகனங்கள் மாற்று பாதையில் செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றன.

    அதே போல் ஈரோடு லோட்டஸ் மருத்துவமனை அருகில் ரயில்வே நுழைவு பாலம் பராமரிப்பு பணி நடைபெறுவதால் அங்கும் செல்ல சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் கனரக வாகனங்கள் மாற்று பாதையில் செல்ல வேண்டும் என்றால் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். தற்போது திருச்செங்கோடு, வெப்படை, பள்ளிபாளையம் வழியாக பெரும்பாலான வாகனங்கள் சென்று வருகின்றன.

    மேலும், இன்னும் சில நாட்கள் ரயில்வே கேட் பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டு இருக்கும் என்பதால் கனரக வாகனங்கள் எந்த வழியாக செல்வது என்று தெரியாமல் குழப்பம் அடைந்துள்ளதாக தெரிவித்தனர்.

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    செய்தியாளர்: மதன், நாமக்கல்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி