ஹோம் /நாமக்கல் /

நாமக்கல் மாவட்டத்தில் நாளை மறுநாள் மின்தடை செய்யப்படும் இடங்கள் இதோ!

நாமக்கல் மாவட்டத்தில் நாளை மறுநாள் மின்தடை செய்யப்படும் இடங்கள் இதோ!

நாமக்கல்லில் மின்தடை பகுதிகள்

நாமக்கல்லில் மின்தடை பகுதிகள்

Namakkal power Cut | நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா வில்லிபாளையம் துணைமின் நிலைய பகுதிகளில் நாளை மறுநாள் (வெள்ளிக் கிழமை) மின் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா வில்லிபாளையம் துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் (வெள்ளிக் கிழமை) அக்டோபர் 28ஆம் தேதி மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் வில்லிபாளையம் துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் இந்த பகுதிகளில் மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை மறுநாள் மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றம் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால், நாளை மறுநாள் பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Must Read : பொள்ளாச்சி ‘சூர்யவம்சம்’ வீட்டில் ஷூட் செய்யப்பட்டு மாபெரும் ஹிட்கொடுத்த படங்களின் லிஸ்ட்!

அதன்படி, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

வில்லிபாளையம், ஜங்கமநாய்க்கன்பட்டி, சின்னமநாயக்கன்பட்டி, சுங்ககாரன்பட்டி, நல்லாகவுண்டம்பாளையம், பெரியாகவுண்டம்பளையம், தம்மகாளிபாளையம், பில்லூர், கூடச்சேரி, அர்த்தனாரிபாளையம், மாவுரெட்டி, ஓவியம்பாளையம், தேவிபாளையம், கீழகடை, கஜேந்திரநகர், சுண்டக்காளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளர் ராணி தெரிவித்துள்ளார்.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Namakkal, Power cut, Power Shutdown