ஹோம் /நாமக்கல் /

நாமக்கலில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் இவைதான்.. உங்க ஊர் இருக்கானு பாருங்க!

நாமக்கலில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் இவைதான்.. உங்க ஊர் இருக்கானு பாருங்க!

நாமக்கல் மாவட்டத்தில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள்...

நாமக்கல் மாவட்டத்தில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள்...

Namakkal | நாமக்கல் மாவட்டத்தில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal | Namakkal

    நாமக்கல் மாவட்டத்தில் வியாழக் கிழமை (நவம்பர் 24) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

    நாமக்கல் அருகே உள்ள வளையப்பட்டி, காளப்பநாயக்கன்பட்டி ஆகிய துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் இந்த பகுதியில் நாளை மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி மின்வாரியம் சார்பில் மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும் இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

    இதனால் பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    ALSO READ | நாமக்கல் முட்டைக்கு அதிகரித்த திடீர் மவுசு - காரணம் இதுதான்!

    இதையடுத்து, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவல்களை மின்வாரிய செயற்பொறியாளர்கள் நாகராஜன், முருகன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    மின் தடை ஏற்படும் இடங்கள்:

    வளையப்பட்டி துணை மின் நிலையம்:

    வளையப்பட்டி, புதுப்பட்டி, மேட்டுப்பட்டி, வாழவந்தி, ரெட்டையாம்பட்டி, ஜம்புமடை, செவந்திப்பட்டி, குரும்பப்பட்டி, பொம்மசமுத்திரம், கணவாய்பட்டி, நல்லூர், திப்ரமகாதேவி, வடுகப்பட்டி, மோகனூர், ஒருவந்தூர்.

    காளப்பநாயக்கன்பட்டி துணை மின் நிலையம்:

    வளையப்பட்டி, புதுப்பட்டி, மேட்டுப்பட்டி, வாழவந்தி, ரெட்டையாம்பட்டி, ஜம்புமடை, செவந்திப்பட்டி, குரும்பப்பட்டி, பொம்மசமுத்திரம், கணவாய்பட்டி, நல்லூர், திப்ரமகாதேவி, வடுகப்பட்டி, மோகனூர், ஒருவந்தூர்

    Published by:Anupriyam K
    First published:

    Tags: Local News, Namakkal, Power Shutdown, Shutdown