Home /namakkal /

நாமக்கலில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் தெரியுமா?

நாமக்கலில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் தெரியுமா?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

நாமக்கலில் நாளை மின்தடை செய்யப்படும் இடங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Erumaipatti, India
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (புதன் கிழமை) 14 ம் தேதி மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி துணை மின் நிலையம் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கின்றது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட இருக்கின்றது.

அன்றயை தினம் பொது மக்கள் மின் தேவை இருப்பின் வேறு மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்: எருமப்பட்டி, வரகூர், பொட்டிரெட்டிப்பட்டி, அலங்காநத்தம், தோட்டமுடையாம்பட்டி, நவலடிப்பட்டி, பவித்திரம், தேவராயபுரம், முட்டாஞ்செட்டி, வரதராஜபுரம், சிங்களம்கோம்பை, காவக்காரப்பட்டி, பவித்திரம்புதூர், செல்லிபாளையம் மற்றும் கஸ்தூரிப்பட்டி

கெட்டிமேடு துணை மின்நிலையம்: கோணங்கிப்பட்டி, பொன்னேரி, காளிசெட்டிப்பட்டி, புதுக்கோட்டை, அ.பாலப்பட்டி, ஈச்சவாரி, பொம்மசமுத்திரம், கெட்டிமேடு உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை ஏற்படுகிறது.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Namakkal

அடுத்த செய்தி