Home /namakkal /

நாமக்கலில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் தெரியுமா?

நாமக்கலில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் தெரியுமா?

நாமக்கல் மின்வாரியம்

நாமக்கல் மின்வாரியம்

நாமக்கலில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Mallasamudram, India
    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள மல்லசமுத்திரம் துணை மின் நிலையத்தில் நாளை(செவ்வாய் கிழமை) 13 ம் தேதி மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள மல்லசமுத்திரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

    அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கின்றது. இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட இருக்கின்றது.

    அன்றயை தினம் பொது மக்கள் மின் தேவை இருப்பின் வேறு மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    ஆகையால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருச்செங்கோடு துணை மின் நிலைய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்ற தகவலை திருச்செங்கோடு மின்வாரிய செயற்பொறியாளர் முருகன் தெரிவித்துள்ளார்.

    மின்தடை ஏற்படும் பகுதிகள்:

    மல்லசமுத்திரம், மாமரப்பட்டி, வடுகபாளையம், கோட்டபாளையம், கரியகவுண்டம்பாளையம், பாலமேடு, அக்கரைப்பட்டி, செம்பாம்பாளையம், கூத்தாநத்தம், காளிப்பட்டி, மங்களம், கரட்டுவளவு, சின்னகாளிப்பட்டி, செண்பகமகாதேவி, கொளந்தானூர், கண்டர்குலமாணிக்கம், மாமுண்டி, சப்பையாபுரம், நாச்சிபட்டி மற்றும் கட்டிப்பாளையம் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி