Home /namakkal /

நாமக்கலில் நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் தெரியுமா

நாமக்கலில் நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் தெரியுமா

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

நாமக்கல் மாவட்டத்தில் நாளை மின்தடை செய்யப்படும் இடங்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India
    நாமக்கல் மாவட்டம் நல்லூர் துணை மின்நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) 6ம் தேதி மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

    நாமக்கல் மாவட்டம் நல்லூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

    அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கின்றது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட இருக்கின்றது.

    ஆகையால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாமக்கல் மாவட்டம் நல்லூர் துணை மின்நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் ராணி தெரிவித்துள்ளார்..

    மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:

    நல்லூர், கந்தம்பாளையம், ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌கருந்தேவம்பாளையம், மணியனூர், வைரம்பாளையம், கோலாரம், ராமதேவம், நடந்தை, கோதூர், திடுமல்கவுண்டம்பாளையம், திடுமல், நகப்பாளையம், அழகுகிணத்துப்பாளையம், கொண்டரசம்பாளையம், பெருங்குறிச்சி, சித்தாளந்தூர், சுள்ளிபாளையம், குன்னமலை, கவுண்டிபாளையம்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி