Home /namakkal /

நாமக்கலில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் தெரியுமா?

நாமக்கலில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் தெரியுமா?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

நாமக்கல் மாவட்டத்தில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kalappanaickenpatti, India
    நாமக்கல் மாவட்டம் காளப்பநாயக்கன்பட்டி துணை மின்நிலையத்தில் நாளை (வியாழக் கிழமை) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

    நாமக்கல் மாவட்டம் காளப்பநாயக்கன்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

    அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கின்றது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட இருக்கின்றது.

    ஆகையால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காளப்பநாயக்கன்பட்டி துணை மின்நிலையதுக்குட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய செயற்பொறியாளர் நாகராஜன்தெரிவித்துள்ளார்.

    மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: காளப்பநாயக்கன்பட்டி, பேளுக்குறிச்சி, திருமலைப்பட்டி, கொல்லிமலை, காரவள்ளி, ராமநாதபுரம்புதூர், பள்ளம்பாறை, உத்திரகிடிகாவல், துத்திக்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி