Home /namakkal /

நாமக்கல்: வட்டார இயக்க மேலாளார் காலிப்பணியிட அறிவிப்பு- 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.!

நாமக்கல்: வட்டார இயக்க மேலாளார் காலிப்பணியிட அறிவிப்பு- 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.!

கோப்பு படம்

கோப்பு படம்

Namakkal Employment Opportunities | நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த வட்டார இயக்க மேலாளராக பெண்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Namakkal, India
நாமக்கல்: வட்டார இயக்க மேலாளார் காலிப்பணியிடம் அறிவிப்பு-வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.!

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த வட்டார இயக்க மேலாளராக பெண்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்த திட்டத்தில் 3 ஆண்டு அனுபவம் உள்ள 28 வயதுக்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வட்டார இயக்க மேலாண்மை அலகில், நாமக்கல் மாவட்ட அளவில் ஒப்பந்த அடிப்படையில் இரண்டு வட்டார இயக்க மேலாளா்கள் (கொல்லிமலை, வெண்ணந்தூா்), ஏழு வட்டார ஒருங்கி ணைப்பாளா்கள் (கபிலா்மலை, எருமப்பட்டி, மல்லசமுத்திரம், மோக னூா், நாமகிரிபேட்டை, வெண்ணந்தூா்) தகுதியின் அடிப்படையில் பெண்கள் மட்டும் தோ்வு செய்யப்பட உள்ளனா்.

வட்டார இயக்க மேலாளருக்கு தகுதிகளாக, ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் குறைந்தபட்சம் ஆறு மாத சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் இதேபோன்ற திட்டங்களில் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிப்போா் 28 வயதுக்கு உள்பட்ட வராகவும், நாமக்கல் மாவட்டத்தில் வசிப்பவ ராகவும் இருக்க வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

கணினி அறிவியல் அல்லது கம்ப்யூட்டாா் அப்ளிகேசன் பட்டப்படிப்பு முடித்த வா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். வட்டார ஒருங்கி ணை ப்பாளருக்கான தகுதிகள், ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் குறைந்தபட்சம் ஆறு மாத சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

இதையும் வாசிக்க: நாமக்கலில் பாரம்பரிய நெல் விதைகள் 50% மானியத்தில் விற்பனை- கிடைக்கும் இடங்கள் இதோ.! 

குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் இதேபோன்ற திட்டங்களில் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிப்போா் 28 வயதுக்கு உள்பட்ட வராகவும், அந்தந்த வட்டாரத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். மேற்கண்ட தகுதி உடைய விண்ணப்பதாரா்கள் எழுத்துத் தோ்வு மற்றும் நோ்முகத் தோ்வு மூலம் தோ்வு செய்யப்பட உள்ளனா்.

தகுதியான பெண்கள் தங்களது விண்ணப்பத்தை வருகிற 30 -ந்தேதிக்குள் மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் சமா்ப்பிக்க வேண்டும் . இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
Published by:Siddharthan Ashokan
First published:

Tags: Employment, Namakkal, Tamilnadu

அடுத்த செய்தி