முகப்பு /நாமக்கல் /

நாமக்கல் மாவட்ட அளவிலான ஓவிய போட்டி.. ஆச்சரியப்படுத்திய சிறுவர்கள்

நாமக்கல் மாவட்ட அளவிலான ஓவிய போட்டி.. ஆச்சரியப்படுத்திய சிறுவர்கள்

X
ஓவியம்

ஓவியம் வரையும் சிறுவன்

Namakkal | நாமக்கல்லில் குடியரசு தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான ஓவியப் போட்டி நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal, India

நாட்டின் 74-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் நாமக்கல்லில் குடியரசு தின விழாவை முன்னிட்டு ஓவிய போட்டி நடைபெற்றது.

நாமக்கல் அடுத்துள்ள வேட்டாம்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் நாமக்கல் மாவட்ட சிலம்ப ஆசான்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நல சங்கத்தின் சார்பில் பள்ளி மாணவர்களின் அறிவுத்திறனை வளர்க்கவும் மேம்படுத்தவும் மாவட்ட அளவிலான ஓவிய போட்டி நடைபெற்றது.

கொங்கு டான்ஸ் பாத்துருக்கீங்களா? நாமக்கல்லில் ஒரே நேரத்தில் 600 பேர் ஆடிய அசத்தலான வள்ளி கும்மியாட்டம்

இதில் புவி வெப்பமயமாதல் தலைப்பில் சுமார் 250க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர்கள் ஆர்வத்துடன் ஓவியங்களை வரைந்தனர். இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

First published:

Tags: Local News, Namakkal