Home /namakkal /

நாமக்கலில் மாவட்ட அளவில் நடைபெற்ற வில்வித்தை போட்டி- மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு

நாமக்கலில் மாவட்ட அளவில் நடைபெற்ற வில்வித்தை போட்டி- மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு

வில்வித்தைப் போட்டியில் பங்கேற்ற மாணவிகள்

வில்வித்தைப் போட்டியில் பங்கேற்ற மாணவிகள்

நாமக்கலில் மாவட்ட அளவில் நடைபெற்ற வில் வித்தை பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வமாக கலந்துகொண்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India
    நாமக்கல் மாவட்ட அளவிலான வில் வித்தை போட்டி தமிழ்நாடு பஞ்சாயத்து யுவ கிருத கேல் அபியான் சார்பில் நடைபெற்றது. இதில் ஏராளமான வில்வித்தை போட்டியாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களுடைய திறமைகளை வெளிக் காட்டினார்கள்.

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்லக்காபாளையம் தனியார் பள்ளியில் மாவட்ட அளவிலான வில் வித்தை போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் இப்போட்டியில் பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்று 17 மாணவிகள் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றனர்.

    வில்வித்தைப் போட்டியில் மாணவ, மாணவிகள்


    வெற்றிப் பெற்றவர்கள் மாநில போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். மேலும் மாணவ, மாணவிகளை போட்டிக்கு தயார்படுத்திய பயிற்சியாளர் பாலகிருஷ்ணன் சிறந்த பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டார்.

    இதுகுறித்து பயிற்சியாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில், வில்வித்தை போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் சிறப்பாக தங்களுடைய திறமைகளை வெளிக் காட்டினார்கள். ஒரு மாணவன் வில்வித்தை கற்றுக் கொள்ளும் போது மனநிலை மற்றும் யோசிக்கும் திறன் மிகவும் கூர்மையாக இருக்கும். ஏனென்றால் அம்பு விடும்போது காற்றின் திசை அறிந்து அதற்கு ஏற்றார் போல் குறி வைத்தால் தான் இலக்கை சரியாக சேரும். வில்வித்தை கற்றுக் கொள்ளும் மாணவன் காற்றின் திசை அறிவது மட்டுமின்றி அதிக திறனுடன் யோசிக்கும் போது வாழ்க்கையில் நல்ல சிந்தனைகளை நினைத்து வெற்றி அடைய முடியும். ஒரு செயலை செய்யும் போது நம்மை மிகவும் தைரியத்துடன் வைத்து கொள்ள உறுதியானகவும் இருக்கும். வில்வித்தை அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும். நம் மனதையும் உடலையும் புத்துணர்ச்சி வைத்து கொள்ளவதுற்கு உதவியாக இருக்கும் என்று தெரிவித்தார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி