Home /namakkal /

நாமக்கலில் மீண்டும் குடியிருப்புக்குள் புகுந்த வெள்ள நீர்- கரையோர மக்கள் பாதிப்பு

நாமக்கலில் மீண்டும் குடியிருப்புக்குள் புகுந்த வெள்ள நீர்- கரையோர மக்கள் பாதிப்பு

நாமக்கல் வெள்ளம்

நாமக்கல் வெள்ளம்

கர்நாடகா காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கடந்த சில நாட்களாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால் வெள்ள நீர் ஆர்ப்பரித்துக் கொண்டு செல்வதால் மீண்டு?

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India
    கர்நாடகா காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கடந்த சில நாட்களாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால் வெள்ள நீர் ஆர்ப்பரித்துக் கொண்டு செல்கிறது. அதன் காரணமாக மீண்டும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. கரையோர மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.

    தற்போது குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து உள்ளதால் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு முகாமில் தங்கியுள்ளனர். மேலும் அவர்களுக்கு தேவையான உணவுகள், தேநீர், பிஸ்கட் வழங்கப்பட்டு வருகிறது.

    தற்போது, மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்திற்கு மேல் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காவிரி கரையோர பகுதிகளான குமாரபாளையம், பள்ளிப்பாளையத்தில் வெள்ள நீர் கரைகளை தாண்டி ஆர்ப்பரித்து கொண்டு செல்கிறது.

    நாமக்கல் வெள்ளம்


    இதனால் குமாரபாளையம் காவிரி கரையோர பகுதிகளான அண்ணா நகர், கலைமகள் தெரு, இந்திரா நகர், மணிமேகலை தெருவில் வெள்ள நீர் சூழ்ந்து உள்ளது.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு இதேபோல் மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1.80 கன அடி நீர் வெளியேற்றப்பட்டதால் கரையோர பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் பெரிதும் பாதிப்பு அடைந்தனர். இந்த பாதிப்பில் இருந்து வெளியே வருவதற்குள் மீண்டும் வெள்ள பெருக்கு ஏற்பட்டு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து உள்ளதால் தங்கள் இயல்பு வாழ்க்கை இழந்து என்ன செய்வதென்று தவித்து வருகின்றனர்.

    செய்தியாளர்: மதன், நாமக்கல்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி