Home /namakkal /

Namakkal | ரூ.46 லட்சத்துக்கு ஏலம் போனது பருத்தி -வியாபாரிகள் மகிழ்ச்சி

Namakkal | ரூ.46 லட்சத்துக்கு ஏலம் போனது பருத்தி -வியாபாரிகள் மகிழ்ச்சி

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

சுரபி ரகப பருத்தி குறைந்தபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.9,812-க்கும், அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.11,640-க்கும், கொட்டு ரக பருத்தி குறைந்தபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.6,035-க்கும், அதிகப்பட்சமாக ஒரு குவிண்டால் ரூ.8,935-க்கும் ஏலம் போனது. 

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    நாமக்கல் அருகே உள்ள ராசிபுரம் வேளாண் ஒழுங்கு முறை விற்பனையகத்தில் நடந்த ஏலத்தில் பருத்தி மூட்டைகள் ரூ.46 லட்சத்துக்கு ஏலம் போனது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் பருத்தி விலை அதிகரித்து ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்த நடந்த ஏலத்தில், முத்துக்காளிப்பட்டி, மசக்காளிபட்டி, கவுண்டம்பாளையம், சந்திரசேகரபுரம், அணைப்பாளையம், பாச்சல், மின்னக்கல், சிங்களாந்தபுரம், முருங்கப்பட்டி, குருசாமிபாளையம், அம்மாபாளையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.

    ஆர்.சி.எச் ரக பருத்தி 785 மூட்டைகளும், சுரபி ரக பருத்தி 582 மூட்டைகளும், கொட்டு ரக பருத்தி 46 மூட்டைகளும் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் ஆர்.சி.எச் ரக பருத்தி குறைந்தபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.9,412-க்கும், அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.12,039-க்கும், சுரபி ரகப பருத்தி குறைந்தபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.9,812-க்கும், அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.11,640-க்கும், கொட்டு ரக பருத்தி குறைந்தபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.6,035-க்கும், அதிகப்பட்சமாக ஒரு குவிண்டால் ரூ.8,935-க்கும் ஏலம் போனது.

    மொத்தம் 1,413 மூட்டை பருத்தி ரூ.46 லட்சத்துக்கு விற்பனையானது. இந்த ஏலத்தில், சேலம், ஆத்தூர், ராசிபுரம், திருப்பூர், கோவை, பல்லடம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து வந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி