முகப்பு /நாமக்கல் /

நாமக்கல்லில் வரத்து அதிகரிப்பால் விலை குறைந்த பருத்தி..!

நாமக்கல்லில் வரத்து அதிகரிப்பால் விலை குறைந்த பருத்தி..!

X
ஏலத்திற்கு

ஏலத்திற்கு கொண்டுவரப்பட்ட பருத்தி மூட்டைகள்

Cotton | நாமக்கல், சேந்தமங்கலம், பவித்ரம், தா.பேட்டை, துறையூர் முசிறி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் இருந்து 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பருத்தி மூட்டைகளை ஏலத்தில் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal | Namakkal

நாமக்கல்லில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரம் தோறும் பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. நடைபெற்ற ஏலத்தில் நாமக்கல், சேந்தமங்கலம், பவித்ரம், தா.பேட்டை, துறையூர் முசிறி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் இருந்து 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பருத்தி மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

இந்த ஏலத்தில் ஆர்.சி.எச் ரகம் குவிண்டாலுக்கு ரூ.7,100 முதல் ரூ.8,539 வரையிலும், சுரபி ரகம் ரூ.8,379 முதல் 8,679 வரையிலும் மட்ட ரகம் ரூ 4,711 முதல் ரூ. 7,000வரையிலும் ஏலத்திற்கு விடப்பட்டது. இந்த ஏலத்தில் 5700 பருத்தி மூட்டைகள் 1.50 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.

இதேபோல் கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் ஆர்.சி.எச் ரகம் குவிண்டாலுக்கு ரூ.6,569 முதல் ரூ.8,461 வரையிலும், டிசிஎச் ரகம் ரூ.8,069 முதல் 8,609 வரையிலும் மட்ட ரகம் ரூ3,500 முதல் ரூ. 7,900வரையிலும் ஏலத்திற்கு விடப்பட்டது. இந்த ஏலத்தில் 5700 பருத்தி மூட்டைகள் 1.65கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த வாரத்தை விட இந்த வாரம் பருத்தி விலை சற்று குறைந்துள்ளதாகவும், தொடர்ந்து வரத்து அதிகரித்து வரும் நிலையில் விலை சற்று குறைந்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

First published:

Tags: Local News, Namakkal