நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் கடந்த 10.08.2021 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான சிறப்பு முகாமில் திருநங்கை ஸ்ரேயா அவர்கள் மேல்நிலைக் கல்வி தொடர திருநங்கை என்பதால் பள்ளியில் சேர்ந்து கல்வி பயில ஆவன செய்யக் கோரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் மனு அளித்தார்.
அதன் அடிப்படையில் திருநங்கை ஸ்ரேயா அவர்கள் பள்ளியில் பயில மாவட்ட ஆட்சியர் மேற்கொண்ட நடவடிக்கையின்படி, பள்ளிபாளையம் கிருஷ்ணவேணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து படித்தார்.
அவர், இந்தாண்டு நடைபெற்ற பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்நாடு அளவில் ஒரே ஒரு மூன்றாம் பாலினத்தவராக தேர்வு எழுதிய திருநங்கை ஸ்ரேயா அவர்கள் 337 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா பி.சிங்கை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். பனிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்த மாவட்ட ஆட்சியர், தொடர்ந்து கல்லூரியில் சேர்ந்து நன்றாக படித்து பட்டம் பெற்று, நல்ல வேலைக்கு செல்ல வேண்டும். மேலும் மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் எனவும், மேற்படிப்பு பயில தேவையான அனைத்து உதவிகளையும் அரசின் சார்பில் செய்து தரப்படும் எனவும் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: 12th exam, Local News, Namakkal, Transgender