முகப்பு /நாமக்கல் /

மாவட்ட மக்களை பாராட்டிய நாமக்கல் ஆட்சியர்... ஏன் தெரியுமா?

மாவட்ட மக்களை பாராட்டிய நாமக்கல் ஆட்சியர்... ஏன் தெரியுமா?

மாவட்ட மக்களை பாராட்டிய நாமக்கல் ஆட்சியர்

மாவட்ட மக்களை பாராட்டிய நாமக்கல் ஆட்சியர்

Namakkal News : நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா பி .சிங் கலந்து கொண்டு தேசிய வாக்காளர் தின உறுதி மொழியை வாசிக்க அனைவரும் தேசிய வாக்காளர் தின உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்த பேரணியானது மோகனூர் சாலை, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் அலுவலகம், நாமக்கல் அரசு மகளீர் மேல்நிலைப்பள்ளி, அண்ணா சிலை, மணிக்கூண்டு மாநில நெடுஞ்சாலை துறை அலுவலகம், நாமக்கல் வட்டாட்சியர் அலுவலகம், பொதுப்பணி துறை அலுவலகம்,மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பி.எஸ்.என்.எல் அலுவலகம் வழியாக வந்து மீண்டும் நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள நூற்றாண்டு விழா கலை அரங்கத்தை அடைந்தது.

தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணியில் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் திரளாக கலந்துகொண்டனர். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை தொடர்ந்து நடந்து வந்தார். பின்னர் நூற்றாண்டு விழா கலை அரங்கத்தில் நடந்த தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா பி.சிங் கலந்துகொண்டு

தேசிய வாக்காளர் தின உறுதி மொழியை வாசிக்க அனைவரும் தேசிய வாக்காளர் தின உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

மேலும் தேசிய வாக்காளர் தினம் குறித்து அனைத்து விழிப்புணர்வு கருத்துக்களையும் விளக்கி நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா பி.சிங் பேசினார்.

அப்போது நாமக்கல் மாவட்டத்தில் 80 சதவீதம் பேர் ஆதார் அட்டையுடன் வாக்காளர் அட்டையை இணைந்து உள்ளதற்கு அனைவருக்கும் பாராட்டு தெரிவித்தார். மேலும்

அடுத்து வரும் எந்த தேர்தலிலும் 100 சதவீத வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்றும், 18 வயதான அனைவரும் வாக்காளர் குழு பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா பி.சிங் கேட்டுக்கொண்டார். தேசிய வாக்காளர் தினம் பல்வேறு போட்டிகளில் வென்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் வழங்கினார். இறுதியில் தேசிய வாக்காளர் தினம் விழிப்புணர்வு கலை நிகழ்சிகளும் நடத்தப்பட்டது.

First published:

Tags: Local News, Namakkal