Home /namakkal /

தங்கும் விடுதிகளை பதிவு செய்யாவிட்டால் மூடப்படும்- நாமக்கல் ஆட்சியர் எச்சரிக்கை

தங்கும் விடுதிகளை பதிவு செய்யாவிட்டால் மூடப்படும்- நாமக்கல் ஆட்சியர் எச்சரிக்கை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

நாமக்கலில் முறைப்படி பதிவு செய்யப்படாத விடுதிகள் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    நாமக்கல் மாவட்ட விடுதிகளை பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங் எச்சரிக்கை
    விடுத்துள்ளார். மீறியவர்களின் விடுதிகள் மூடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

    நாமக்கல் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் நடத்தும் பெண்கள் விடுதிகள், அறக்கட்டளைகள், சங்கங்கள், மதம் சார்ந்த நிறுவனங்கள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், தொழிற்கல்வி பயிற்சி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தனியாரால் நடத்தப்பட்டு வரும் பெண்கள் விடுதிகள் மற்றும் குழந்தைகள் இல்லங்கள், பள்ளி, கல்லூரிகள் தற்காலிகமாக நடத்தும் விடுதிகள் அனைத்தையும் இந்த மாத இறுதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

    பதிவு உரிமம் பெறுவதற்கு தமிழ்நாடு அரசின் https://tnswp.com என்ற இணையதளம் வழியாக விண்ணப்பித்து, அதன் நகலினை இணைத்து உரிய ஆவணங்களுடன் ஒப்படைக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் பதிவு செய்ய தவறினால் விடுதியின் உரிமையாளர் மற்றும் மேலாளர் ஆகியோருக்கு சட்டப்பிரிவின்படி 2 ஆண்டு காலம் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.

    இந்த மாத இறுதிக்குள் விண்ணப்பிக்க தவறிய நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும்.

    பதிவு உரிமம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். 18 வயதிற்கு கீழ் உள்ள பள்ளி குழந்தைகள் விடுதி மற்றும் குழந்தைகள் இல்லங்கள் பதிவிற்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகினை தொடர்பு கொள்ள வேண்டும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி