Home /namakkal /

30ம் தேதிக்குள் மாற்றுத்திறனாளிகள் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் - நாமக்கல் கலெக்டர் உத்தரவு

30ம் தேதிக்குள் மாற்றுத்திறனாளிகள் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் - நாமக்கல் கலெக்டர் உத்தரவு

நாமக்கல்

நாமக்கல்

Disabled Persons, Lifetime Certificate, Namakkal, Collector | வரும் 30ம் தேதிக்குள் நாமக்கல் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் இந்த நாள் தான் கடைசி தேதி என்று மாவட்ட கலெக்டர்  ஸ்ரேயா பி. சிங். தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India
வரும் 30ம் தேதிக்குள் நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இந்த நாள் தான் கடைசி தேதி என்று மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி. சிங். தெரிவித்துள்ளார்.

இந்த சான்றிதழ் மாற்றுத்திறனாளிகளுக்கு அவசியமாக கருதப்படுகிறது. இந்த சான்றிதழ் இருந்தால் தான் அவர்கள் மாதந்தோறும் ரூ.2000 உதவித்தொகை வழங்கப்படும். இல்லாவிட்டால் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவது நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க ; Namakkal | கொல்லிமலை ஆகாய கங்கை அருவியில் குளிக்க அனுமதி - சுற்றுலா பயணிகள் உற்சாகம்

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் மாதந்தோறும் ரூ. 2000 பெறுவோா் அனைவரும் கிராம நிா்வாக அலுவலரிடம் இருந்து தங்களது வாழ்நாள் சான்றிதழ் பெற்று வரும் 30-ம் தேதிக்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.

அவ்வாறு சமா்ப்பிக்கும் பட்சத்தில் 2022-23 -ம் ஆண்டிற்கான உதவித் தொகை யை மாதந்தோறும் தொடா்ந்து பெற்றிடலாம். மாற்று திறனாளிகள் அனைவரும் நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தரைதளத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரில் வந்து வாழ்நாள் சான்றிதழ் படிவத்தை பெற்று, அதில் கிராம நிா்வாக அலுவலரிடமிருந்து கையொப்பம் பெற்று உரிய சான்றிதழ்களுடன் சமா்ப்பிக்க வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் விவரங்களுக்கு 94999-33483 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published:

Tags: Local News, Namakkal

அடுத்த செய்தி