ஹோம் /நாமக்கல் /

Namakkal | வேலை இல்லாதோர் உதவி தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி?- விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்

Namakkal | வேலை இல்லாதோர் உதவி தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி?- விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

மாற்றுத்திறனாளிகள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கும் பெறாதாவர்களுக்கும் மாதம் ரூ.600 மேல்நிலை கல்வி தேர்ச்சியடைந்தவர்களுக்கு ரூ. 750, பட்டதாரிகளுக்கு ரூ.1,000 வீதம் 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். தற்போது ஜூலை 1 முதல் செப். 30 வரையிலான 3 மாததுக்க

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Namakkal, India

  வேலை இல்லாதோர் உதவி தொகை பெறுவதற்கு எப்படி விண்ணக்கவேண்டும்? அதன் தகுதிகள் குறித்து காணலாம்.

  வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து இதுவரை எந்த வேலையும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவி தொகை அரசால் வழங்கப்படுகிறது. வேலையில்லாத இளைஞர்கள் உதவித் தொகை விண்ணப்பிப்பது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

  அதன்படி, கீழ்கண்ட வரம்புகளுக்குள் வருபவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது.

  10ம் வகுப்பு தேர்ச்சியடையாமல் இருந்தால் ரூ. 200, தேர்ச்சியடைந்து இருந்தால் ரூ.300, மேல்நிலை கல்வியில் தேர்ச்சியடைந்தவர்களுக்கு ரூ. 400, பட்டதாரிகளுக்கு ரூ. 600 என 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.

  மாற்றுத்திறனாளிகள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கும் பெறாதாவர்களுக்கும் மாதம் ரூ.600, மேல்நிலை கல்வி தேர்ச்சியடைந்தவர்களுக்கு ரூ. 750, பட்டதாரிகளுக்கு ரூ.1,000 வீதம் 10ஆண்டுகளுக்கு வழங்கப்படும். தற்போது ஜூலை 1 முதல் செப்டம்பர்30 வரையிலான 3 மாதத்துக்கு வழங்கப்படும்

  மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டு காலம் முடிவுற்ற பதிவுதாரர்களுக்கும் இந்த மையத்தில் பதிவு செய்து ஓராண்டு முடிவுற்ற அனைத்து மாற்றுத் திறனாளிகளும் தகுதியானவர்கள்.

  ஆதிதிராவிடா், பழங்குடியினா் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோா் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000 மிகாமலும் இருக்க வேண்டும்.

  மாற்றுத் திறனாளிகளுக்கு வருமான வரம்பு இல்லை.

  மனுதாரா் அரசு அல்லது தனியாா் நிறுவனங்களின் வாயிலாக எந்தவிதமான நிதி உதவித்தொத்கையும் பெறுபவராக இருத்தல் கூடாது. அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவ, மாணவியராக இருத்தல் கூடாது.

  இந்த நிபந்தனை தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல் வழிக்கல்வி கற்கும் மனுதாரா்களுக்கு பொருந்தாது.

  தகுதியுடையவர்கள் நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவகத்தில் அனைத்து அசல் சான்றிதழ்கள், அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வரவேண்டும் ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துத்ள்ளாா்.

  Published by:Karthick S
  First published:

  Tags: Local News, Namakkal