முகப்பு /நாமக்கல் /

தனியார் பள்ளி வேன் மற்றும் பேருந்துகளை ஆய்வு செய்த நாமக்கல் ஆட்சியர்!  

தனியார் பள்ளி வேன் மற்றும் பேருந்துகளை ஆய்வு செய்த நாமக்கல் ஆட்சியர்!  

X
நாமக்கல்

நாமக்கல் ஆட்சியர் ஆய்வு

Namakkal inspection | மாணவ, மாணவிகளை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் மற்றும் பேருந்துகள் சரியான முறையில் பராமரிக்கப்பட்டு உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யும் பணி நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.

  • Last Updated :
  • Namakkal, India

தமிழகத்தில் வரும் ஜூன் 1- ந் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் மாணவ, மாணவிகளை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் மற்றும் பேருந்துகள் சரியான முறையில் பராமரிக்கப்பட்டு உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யும் பணி நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் டாக்டர் உமா ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது ஒவ்வொரு வாகனங்களிலும் முதலுதவி பெட்டி, தீ அணைப்பான் உள்ளதா, ஓட்டுநர்கள் அனைவரும் லைசன்ஸ் பெற்றுள்ளார்களா, பேருந்தில் படிக்கட்டின் அளவு, அவசர கால வழி அமைக்கப்பட்டு உள்ளதா, சிசிடிவி கேமரா உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்தார்.

மேலும் பள்ளி வேன் ஓட்டுநரிடம் முதலுதவி பெட்டியில் இருக்கு மருந்துகள் ஒவ்வொன்றையும் எவ்வாறு பயன்படுத்துவது, தீ அனைப்பான் கருவியை எவ்வாறு இயக்குவது என கேட்டறிந்தார், அங்கு நடைபெற்ற மருத்துவ முகாமினையும் ஆட்சியர் உமா பார்வையிட்டார்.

இந்த ஆய்வில் நாமக்கல் வடக்கு, தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சம்மந்தப்பட்ட 46 புள்ளிகளிலிருந்து 567 பள்ளி வேன், பேருந்துகள் வந்திருந்தன.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Namakkal, Private schools