நாமக்கல் மாவட்டம் எலந்தைகுட்டையில் நெல் கொள்முதல் நிலையத்தை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் திறந்துவைத்தார்.
திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர் கூடுதலாக நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு இந்த ஆண்டுவிவசாயிகளிடம் இருந்து ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதியில் 4,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளதால்அரசின் சார்பில் ஆண்டுதோறும் எலந்தைகுட்டையில் தற்காலிக நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும். இதனை தொடர்ந்து இந்தாண்டிற்கான நெல் கொள்முதல் நிலையத்தை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாஸ் பி சிங் திறந்து வைத்தார்.
இதைதொடர்ந்து விவசாயிகள் மத்தியில் பேசிய மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங், ’2021 - 2022ம் ஆண்டில் 116 விவசாயிகளிடம் இருந்து 626 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்த நிலையில் தற்போது இந்த ஆண்டு விவசாயிகள் கோரிக்கையை ஏற்று எருமைப்பட்டியில் கூடுதலாக நெல் கொள்முதல் நிலையம் என மாவட்டத்தில் இரண்டு கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்தாண்டு விவசாயிகளிடமிருந்து ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு வேளாண்மை துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விவசாயிகள் பயிரிட்ட நெல்லுக்கு இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக விவசாயிகள் பயன்பெறும் வகையிலும்விவசாயிடமிருந்து கொள்முதல் செய்த நெல்லுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில் விவசாயிகள் வங்கி கணக்கில் நேரடியாக மூன்று நாட்களில் உரிய தொகை செலுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
திருச்செங்கோட்டில் கோழி பிடிக்கும் வித்தியாசமான ஜல்லிக்கட்டு..
செய்தியாளர்: பிரதாப், நாமக்கல்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Namakkal