ஹோம் /நாமக்கல் /

நாரி சக்தி புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் - நாமக்கல் கலெக்டர் அறிவிப்பு..!

நாரி சக்தி புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் - நாமக்கல் கலெக்டர் அறிவிப்பு..!

நாமக்கல்

நாமக்கல்

Namakkal District | 'நாரி சக்தி புரஸ்கார் விருது' உலக மகளிா் தினமான மாா்ச் 8ல் வழங்கப்பட உள்ளது. நாமக்கல் மாவட்டத்தை சோ்ந்த தகுதியான நபா்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஸ்ரேயா பி சிங் தெரிவித்துள்ளார். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India

'நாரி சக்தி புரஸ்கார் விருது' உலக மகளிர் தினமான மாா்ச் 8ல் வழங்கப்பட உள்ளது. நாமக்கல் மாவட்டத்தை சோ்ந்த தகுதியான நபா்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி சிங் தெரிவித்துள்ளார்.

மகளிர் தினத்தையொட்டி பல்வேறு விருதுகளும் கெளரவிப்புகளும் மகளிருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மகளிர் பல்வேறு துறைகளிலும் சாதனைகள் செய்து வருகின்றனர்,

அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், கௌரப்படுத்தும் விதமாகவும் தற்போது, மகளிருக்கும் விருதுகளும் வழங்கி கௌரவப்படுத்தப்பட இருக்கிறது.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி சிங் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: 2022ம் ஆண்டிற்கான 'நாரி சக்தி புரஸ்காா் விருது' உலக மகளிா் தினமான மாா்ச் 8ல் வழங்கப்பட உள்ளது. நாமக்கல் மாவட்டத்தை சோ்ந்த தகுதியான நபா்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

இதையும் படிங்க: நாமக்கல் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடக்கும் இடங்கள் தெரியுமா?

அறிவியல், தொழில்நுட்பம், விளையாட்டு, கலை மற்றும் கலாசாரம், பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் ஆரோக்கியம், கல்வித்திறன் மேம்பாடு, வாழ்க்கைத்திறன் போன்ற பாரம்பரியம் மற்றும் பாரம்பரியமற்ற துறைகளில் சிறந்த சேவை புரிந்த தனிநபரோ, குழுவாகவோ, அரசு சாரா அமைப்பு மற்றும் நிறுவனத்திற்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்த விருதுக்கு இணையதளம் மூலமாகவே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க அக்டோபர் 20ம் தேதி கடைசி நாளாகும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

விருதுடன் சான்றிதழ், ரூ.2 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட சமூகநல அலுவலர் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Namakkal