Home /namakkal /

ஆயிரங்கண் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த சின்ன ஓங்காளியம்மன்

ஆயிரங்கண் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த சின்ன ஓங்காளியம்மன்

சின்ன ஓங்காளியம்மன் கோவில்

சின்ன ஓங்காளியம்மன் கோவில்

நாமக்கல் சின்ன ஓங்காளியம்மன் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

    ஆடி மாதம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மன் ஆலயங்களில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் திரண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தும் கூழ் ஊற்றியும் வழிபாடு நடத்தினர்.

    ஆடிமாதம் என்பது அம்மன் கோவில்களுக்கு மிக உகந்த மாதம் என்பதால் இம்மாதம் முழுவதும் நகரப் பகுதி முதல் கிராமங்கள் வரை உள்ள பக்தர்களின் காவல் தெய்வமாக விளங்கும் மாரியம்மன், கருப்பண்ணசாமி, முனியப்பன் சாமிகளுக்கு வெகு விமரிசையாக விழாக்கள் நடைபெறும்.

    ஆடி வெள்ளியில் கூழ் காய்ச்சி மக்களுக்கு கொடுத்து நல்ல மழை பொழிவு, உடல் நலத்துடன் வாழ வேண்டி அம்மனுக்கு வழிபாடு செய்வதாக கூறுகின்றனர்.



    இதில் குறிப்பாக இந்த மாதத்தில் உள்ள ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் கோவில்களிலும் சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்கள் செய்து விதவிதமான அலங்காரங்களும் செய்தும் வழிபாடுவார்கள். மேலும் கூழ் செய்து அம்மனுக்குப் படைத்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

    சின்ன ஓங்காளியம்மன் கோவில்


    அலங்கரிக்கப்பட்ட நிலையில் அம்மன்


    அந்த வகையில், ஆடி மாதம் இரண்டாம் வெள்ளிக்கிழமை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள சிறப்பு வாய்ந்த சின்ன ஓங்காளிம்மன் கோயிலில் காலை முதலே மக்கள் தங்களுடைய வேண்டுதலை நிறைவேற்றியும் அம்மனை வழிபட்டனர்.

    இதற்காக கோயில் முன்பு உள்ள பெரிய குண்டத்தில் சிறப்பு அலங்காரங்கள் செய்தும், கோயில் முழுவதும் வேப்பிலை தோராணை கட்டியும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இரண்டாம் வெள்ளிக்கிழமை முன்னிட்டு அம்மன் ஆயிரம் கண்கள் கொண்டு அலங்காரம் செய்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    சின்ன ஓங்காளியம்மன் கோவில்


    இதனை காண சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர். மேலும் பக்தர்களுக்கு அம்மனின் சிறந்த உணவாக கருதப்படும் கூழ் வழங்கப்பட்டது. இந்த மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இதுபோன்று சிறப்பு அலங்காரங்கள் செய்து வழிபாடு நடக்கும் என்று தெரிவித்தனர்.

    செய்தியாளர் : மதன் - நாமக்கல்
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி