ஹோம் /Namakkal /

Namakkal | பள்ளிபாளையம்-ஆலாம்பாளையம் சாலையில் மேம்பாலப் பணி- நான்கு சக்கர வாகனங்கள் செல்லத் தடை

Namakkal | பள்ளிபாளையம்-ஆலாம்பாளையம் சாலையில் மேம்பாலப் பணி- நான்கு சக்கர வாகனங்கள் செல்லத் தடை

நாமக்கல் பாலம் கட்டுமானப் பணி

நாமக்கல் பாலம் கட்டுமானப் பணி

Namakkal | நாமக்கல் பள்ளிப்பாளையம் - ஆலாம்பாளையம் செல்லும் சாலையில் மேம்பாலப் பணிகள் நடைபெறுவதால் இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்திலிருந்து ஆலாம்பாளையம் செல்லும் சாலை வரை மேம்பாலம் கட்டும் பணிகள் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

  இதனால் இந்த வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு மாற்றுப் பாதையில் சென்று வருகின்றனர். உள்ளூர் மக்கள் இருசக்கர வாகனங்களில் மட்டும் இவ்வழியாக சென்று வருகின்றனர்.

  மேலும் சாலை பணிகள் நடைபெற்று வருவதால் சாலை குண்டும் குழியுமாக இருக்கிறது. இதனால் வாகனங்கள் டிவிஸ் மேடு பகுதியில் உள்ள கருங்கரடுமேடு காங்கிரீட் சாலை வழியாக அரசு போக்குவரத்து பணிமனையின் பின்புற சாலையை பயன்படுத்தி செல்கின்றன.

  மேலும் ஷேர் ஆட்டோக்களும், சரக்கு வாகனங்களும் இந்த குறுகிய சாலையில் செல்வதால் அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமடைந்து வருகின்றனர். இந்த குறுகலான சாலையில் ஒரே நேரத்தில் எதிரே வரும் வாகனங்களால் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பும், விபத்து ஏற்படும் சூழ்நிலை இருந்தது.

  தற்போது இந்த வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்லும் விதமாக கான்கிரீட் சாலையின் குறுக்கே இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமமின்றி பயணிக்க உதவியாக இருக்கிறது. மேலும் மேம்பாலம் பணிகள் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்தனர்.

  உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

  செய்தியாளர்: மதன், நாமக்கல்.

  Published by:Karthick S
  First published:

  Tags: Local News, Namakkal