முகப்பு /நாமக்கல் /

நாமக்கல் புத்தக திருவிழாவில் பொதுமக்களை கவர்ந்த சாலை விழிப்புணர்வு வாகனம்...

நாமக்கல் புத்தக திருவிழாவில் பொதுமக்களை கவர்ந்த சாலை விழிப்புணர்வு வாகனம்...

X
சாலை

சாலை விழிப்புணர்வு வாகனம்

Namakkal Book Fair | நாமக்கல்லில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் அமைக்கப்பட்டிருந்த விழிப்புணர்வு வாகனம் பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல்லில் முதல் முறையாக புத்தகத் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.  அதில் அமைக்கப்பட்டிருந்த சாலை விழிப்புணர்வு வாகனத்தை பொதுமக்கள் ஆர்வமாக பார்த்து செல்கின்றனர்.  சாலைகள் தொடர்பான சட்டவிதிகளை மீறி வாகனம் ஒட்டுபவர்களால் அதிக விபத்துக்கள் இடம்பெறுகின்றன.  மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதிகளில் வேகமாக வாகனங்களை செலுத்துவதனால் அதிக விபத்துக்கள் நிகழ்கின்றன. அதேபோல் மதுபோதையில் வாகனம் செலுத்துவதனால் தான் அதிகளவில் விபத்துக்கள் ஏற்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பொதுமக்கள் ஆனாலும் சரி சாலை தொடர்பான அதிகாரிகளானாலும் சரி சாலை விதிகளை மிகவும் இறுக்கமாக நடைமுறைப்படுத்தலும் பின்பற்றுவதனாலும் சாலை பாதுகாப்பை உயர்த்தவும் உயிர் ஆபத்துக்களை குறைக்க முடியும் என்ற வகையில் நாமக்கல் புத்தக கண்காட்சியில் இடம்பெற்றுள்ள சாலை விழிப்புணர்வு வாகனம் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

top videos
    First published:

    Tags: Local News, Namakkal