முகப்பு /நாமக்கல் /

நாமக்கலில் களைகட்டும் பாம்பே பாதாம் மில்க் ஷேக் கடை.. மறக்காம போய் டேஸ்ட் பண்ணுங்க!

நாமக்கலில் களைகட்டும் பாம்பே பாதாம் மில்க் ஷேக் கடை.. மறக்காம போய் டேஸ்ட் பண்ணுங்க!

X
நாமக்கல்

நாமக்கல் மில்க் ஷேக் கடை

Namakkal milk shake shop | நாமக்கல் மாவட்டத்தில் பகுதியில்  அமைந்துள்ள  அனைவராலும் விரும்பி அருந்தும் பாம்பே பாதாம் மில்க் ஷேக் கடை பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல்லின் மையப்பகுதியில் உள்ள மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ளது இந்த பாம்பே பாதாம் கடை.  கடந்த 8 மாதங்களுக்கு முன் புதிதாகக் திறக்கப்பட்ட இந்த கடையில்

பாதம்,ரோஸ் மில்க், பிஸ்தா, மற்றும் லெசி போன்ற குளிர்பானங்கள் கிடைக்கின்றன.

ஆரம்ப காலத்தில் சற்று மந்தமாக போன நிலையில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறைவிட்ட பின் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது இந்த கடையில் குழந்தைகள் மட்டும் இல்லாமல் பெண்கள் , வயதானவர்கள் அனைவரும் இந்த கடையில் வந்து சாப்பிடுகின்றனர்.

இந்த பாதாம் பாலில் கொலஸ்ட்ராலையோ, நிறைவுற்ற கொழுப்பினையோ பெற்றிருப்பதில்லை. இதில் குறைந்த சோடியத்தையும், நல்ல கொழுப்பினையும் கொண்டுள்ளதால் உயர் இரத்த அழுத்தத்தைச் சீராக்கி இதய நலத்தைப் பாதுகாக்கிறது. பாதாம் பருப்பில் பாஸ்பரஸ், தாது உப்பு காணப்படுகிறது குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது. கடைகளில் கிடைக்கும் வேர் குளிர்பானங்களை வாங்கி சாப்பிடுவதை விட நல்ல சத்துள்ள பாதாம் பால் சாப்பிடுவது உடலுக்கு நல்ல வலுவை கொடுக்கும் என்கின்றனர்.

இந்த கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்து உள்ளதால் தொடர்சியாக கடைக்கு வருகிறோம் என்றும் தற்பொழுது கோடை காலத்தில் வெயிலுக்கு சற்று இதமாக இருப்பது மட்டுமல்லாமல், குழந்தைகளுக்கு பிடித்த ஓரு குளிர் பானமாக மாறி இருக்கிறது என்று தெரிவித்தார்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Namakkal, Summer Food