முகப்பு /நாமக்கல் /

நாக்கில் அறுசுவைகளை நடனமாட வைக்கும் நாமக்கல் பிரியாணி 

நாக்கில் அறுசுவைகளை நடனமாட வைக்கும் நாமக்கல் பிரியாணி 

X
நாமக்கல்

நாமக்கல் பிரியாணி

Namakkal Briyani | விறகு அடுப்பு, சீரக சம்பா அரிசி என பாரம்பரிய முறைப்படி பிரியாணி தயார் செய்யும் அமுதா பிரியாணி சென்டர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal, India

விறகு அடுப்பு, சீரகச் சம்பா அரிசி எனப் பாரம்பரிய முறையில் செய்த அமுதா பிரியாணி சென்டரில் வாடிக்கையாளர்கள் குவிந்து வருகின்றனர்.

அசைவ பிரியர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட அமுதா பிரியாணி கடை நாமக்கல் நகர் மோகனூர் பிராதான சாலையில் அமைந்துள்ளது. இக்கடையின் உரிமையாளர் பெயர் மூர்த்தி, கடந்த 1986-ம் ஆண்டில் தனது குடும்பத்தினருடன் இணைந்து ஒரு சிறிய சிக்கன் கறி கடையாக ஆரம்பித்தார். அடுத்தக்கட்டமாகச் சில்லி மற்றும் பிரியாணி கடை தொடங்கித் தற்போது வாடிக்கையாளர்களிடம் நல் மதிப்பை பெற்றார்.

பிரியாணி மட்டுமல்லாமல் குடல் கறி, காடை, வாத்து, சிக்கன் வறுவல் என அசைவ பிரியரிகள் விரும்பும் அனைத்து வகையான மாமிச உணவுகளைச் சுவையுடன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றனர். நாமக்கல் நகரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும் அமுதா சிக்கன் பிரியாணி வாங்க இந்தக் கடைக்கு வாடிக்கையாளர்கள் குவிந்து வருகின்றனர்.

மேலும் இது குறித்துப் பேசிய அமுதா பிரியாணி கடை உரிமையாளர்,இந்த நவீன காலத்திலும் விறகு அடுப்பை பயன்படுத்தித் தான்  பிரியாணி தயார் செய்து வருவதாகவும், சீரகச் சம்பா அரிசியே நீண்ட காலமாகப் பிரியாணிக்கு பயன்படுத்தி வருவதாகத் தெரிவித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் இவர்களுக்குச் சொந்தமாகக் கறிக்கடை இருப்பதால் கறியை நேரடியாகப் பிரியாணிக்குப் பயன்படுத்துவதாகக் கூறினார். குறைந்த விலையில் தரமான முறையில் செய்த பிரியாணியை இங்குச் சுவைக்க முடியும் என்று தெரிவித்தனர். லெக் பீஸ், முட்டையுடன் 90 ரூபாய்க்கு மட்டுமே இந்த விற்பனை செய்வதாகக் கடை உரிமையாளர் தெரிவித்தார்.

First published:

Tags: Briyani, Local News, Namakkal