Home /namakkal /

திருச்செங்கோட்டில் நாகேஸ்வரருக்கு நடைபெற்ற 108 பால் குட அபிஷேகம் மற்றும் கூட்டு வழிபாடு- திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருச்செங்கோட்டில் நாகேஸ்வரருக்கு நடைபெற்ற 108 பால் குட அபிஷேகம் மற்றும் கூட்டு வழிபாடு- திரளான பக்தர்கள் பங்கேற்பு

அர்த்தநாரீஸ்வர் கோவிலில் பூஜை

அர்த்தநாரீஸ்வர் கோவிலில் பூஜை

நாமக்கல் மாவட்டத்தில் அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோயிலில் உள்ள நாகேஸ்வரருக்கு 108 பால் குடம் அபிஷேகம் மற்றும்சிறப்பு தீப ஜோதி கூட்டு வழிபாடுநடைபெற்றது‌.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchengode, India
    நாமக்கல் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற தலங்களில் ஒன்றாக விளங்கும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோயிலில் உள்ள நாகேஸ்வரருக்கு 108 பால் குடம் அபிஷேகம் மற்றும் சிறப்பு தீப ஜோதி கூட்டு வழிபாடு நடைபெற்றது‌. இதில் ஏராளமான பத்தர்கள் பங்கேற்றனர்.

    அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் வந்து செல்வார்கள். இக்கோயில் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாக சிறந்து விளங்குவதால் நாமக்கல் மாவட்டத்தில் தனிப்பெருமையுடன் உள்ளது.

    கூட்டு வழிபாடுக்காக காத்திருக்கும் பக்தர்கள்


    இக்கோயில் உள்ள நாகேஸ்வரரை வழிபட்டால் நாகதோஷத்தால் ஏற்படும் திருமணத் தடை என பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இதனால் மலைக்கோயிலுக்கு வருபவர்கள், நாகேஸ்வரர் சன்னதியில் நின்று சிறப்பு பூஜைகள் செய்து வழிப்பட்டு செல்வார்கள்.

    நாமக்கல் கோவிலில் பூஜை


    இதனிடையே நாகேஸ்வரருக்கு 108 பால் குடம் அபிஷேகம்
    மற்றும் விளக்கு பூஜைக்கு தேவையான பொருட்கள் கொண்டு தீப ஜோதி மற்றும் கூட்டு வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டின் மூலம் தேவையில்லாமல் ஏற்படும் பயம், அவநம்பிக்கை, சந்தேகம், கோபம், நீக்கிக் கொள்வதற்காகவும், நாகதோஷத்தால் ஏற்படும் திருமணத் தடை, குழந்தைபேறு, தொழிலில் ஏற்படும் பின்னடைவு, வாகனத்தில் செல்லும்போது ஏற்படும் விபத்துகள், தடைபட்ட கல்வி, வேலை வாய்ப்புகள், பகைவர் பயம், எதிரிகளால் ஏற்படும் இடையூறு, அகால மரணம், காலசர்ப்பதோஷம் போன்றவைகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என்று நம்பப்படுகிறது. நாகேஸ்வரர்க்கு 108 பால் குடம் அபிஷேகம் மற்றும் கூட்டு வழிபாட்டு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நாகேஸ்வர அருளைப் பெற்றனர்.

    செய்தியாளர் : மதன் - நாமக்கல்
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி