Home /namakkal /

அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் பௌர்ணமியன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம்!

அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் பௌர்ணமியன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம்!

அர்த்தநாரீஸ்வரர் கோவில்

அர்த்தநாரீஸ்வரர் கோவில்

நாமக்கல் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் பௌர்ணமியை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைச் சுற்றி கிரிவலம் வந்து வழிபட்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    நாமக்கல் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் பௌர்ணமியை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையைச் சுற்றி கிரிவலம் வந்து வழிபட்டனர்.

    நாமக்கல் மாவட்டத்தில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோயில் உள்ளது. இங்கு மூலவர் சிவனும் பார்வதியும் ஆண் பாதியாகவும், பெண் பாதியாகவும் இணைந்து அர்த்தநாரீஸ்வரராக பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்கள். மேலும் இக்கோயில் தேவாரம் பாடல் பெற்ற தலமாகவும், சிறப்பு மிக்க ஒன்றாகும் உள்ளது. மலைக் கோயில் விசேஷ நாட்களில் ஏராளமான மக்கள் திரண்டு அர்த்தநாரீஸ்வரர் தரிசனம் செய்து விட்டு செல்வார்கள். பௌர்ணமி நாட்களில் கிரிவலம் செல்ல ஆயிரக்கணக்கான மக்கள் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து வந்து செல்வார்கள்.

    இதனிடையே, பௌர்ணமியை முன்னிட்டு அர்த்தநாரீஸ்வரர் மலையைச் சுற்றி பக்தர்கள் கிரிவலம் சென்று வழிநெடுகிலும் உள்ள கோயில்களில் விளக்குகள், கற்பூரம் ஏற்றி தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற மதியம் முதலே குவிந்தனர்.

    பக்தர்கள் கிரிவலம்


    முன்னதாக மலை அடிவாரம் முன்பு தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற விளக்கு மற்றும் சூடம் ஏற்றியும், உடல் நலத்துடனும், மகிழ்வுடனும் வாழ இறைவனை வேண்டிக் கொண்டு கிரிவலத்தை பக்தர்கள் தொடங்கினார்கள். அதன் பின் சுமார் நான்கு கிலோமீட்டர்க்கு மேல் கொண்ட மலைப்பாதையை சுற்றி பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபட்டனர். மேலும் திருவண்ணாமலை கிரிவலம் செல்ல முடியாதவர்கள் பெரும்பாலும் இங்கு வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோயிலுக்கு ஒவ்வொரு மாதமும் பௌவுர்ணமி அன்று உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் செய்யப்பட்டு இருந்தது.

    செய்தியாளர்: மதன் - நாமக்கல்
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி