ஹோம் /நாமக்கல் /

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வடை மாலை அணிவிக்க முன்பதிவு துவக்கம்

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வடை மாலை அணிவிக்க முன்பதிவு துவக்கம்

நாமக்கல் ஆஞ்சநேயர்

நாமக்கல் ஆஞ்சநேயர்

Namakkal District | நாமக்கலில் உள்ள ஆஞ்சேநேயருக்கு வடை மாலை மற்றும் தங்க கவசம் அணிவிக்கவும் முன்பதிவு துவங்கியுள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கலில் உள்ள ஆஞ்சேநேயருக்கு வடை மாலை மற்றும் தங்க கவசம் அணிவிக்க முன்பதிவு துவங்கியுள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் நகரில் ஒரே கல்லால் செதுக்கப்பட்ட ஆஞ்சநேயர் சிலை உள்ளது. இது 18 அடியரம் கொண்டது. தினசரி காலையில் நடை திறக்கப்படுகிறது. மேலும் 9 மணியளவில் ஆஞ்சேநேயருக்கு 1008 வடை மாலை சாத்தப்படுகிறது. இதையொட்டி சிறப்பு பூஜைகளும் நடக்கிறது.

பிறகு, தொடர்ச்சியாக காலை 10 மணிக்கு மஞ்சள், குங்குமம், நல்லெண்ணெய், சீயக்காய், பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம் போன்ற பல்வேறு வாசனை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

தொடர்ந்து மதியம் 1 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். சாமிக்கு தினசரி அபிஷேகம் மற்றும் வடை மாலை அலங்காரம் கட்டளைதாரர்கள் மூலம் நடத்தப்படுகிறது.

அதற்காக ஒரு வருடத்திற்கு முன்பே பக்தர்கள் முன்பதிவு செய்வது வழக்கம். ஒரு நாள் நடைபெறும் வடை மாலை அலங்காரம் மற்றும் அபிஷேகத்துக்கு தலா ரூ.6 ஆயிரம் வீதம் 5 பேர் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Must Read : கோவை குருந்தமலையில் உருவான ஹிட் திரைப்படங்களின் லிஸ்ட்- மனதை கொள்ளை கொள்ளும் இடம்!

பதிவு செய்து பூஜையில் கலந்துகொள்ளும் கட்டளைதாரர்களுக்கு அபிஷேக முடிவில் பிரசாதம் வழங்கப்படும். அதன்படி 2023-ம் ஆண்டுக்கான ஆஞ்சநேயர் கோவிலில் அபிஷேக முன்பதிவு வருகிற 13ஆம் தேதி தொடங்குகிறது அபிஷேகம் செய்ய விரும்பும் பக்தர்கள் கோவில் நிர்வாக அலுவலகத்தில் முழு தொகையையும் செலுத்தினால் மட்டுமே அபிஷேக தேதி முன்பதிவு செய்யப்படும். இல்லை என்றால் முன்பதிவு செய்யப்பட மாட்டாது என்று கோவில் உதவி ஆணையர் இளையராஜா தெரிவித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதேபோல் ஆஞ்சநேயருக்கு தங்ககவசம் அணிவிக்க ரூ.5 ஆயிரம், வெள்ளி கவசத்துக்கு ரூ.750, முத்தங்கி அலங்காரத்துக்கு ரூ.3 ஆயிரம், தங்கத்தேருக்கு ரூ.2 ஆயிரம் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Namakkal, Temple