ஹோம் /நாமக்கல் /

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு பொங்கலை முன்னிட்டு சிறப்பு பூஜை: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு பொங்கலை முன்னிட்டு சிறப்பு பூஜை: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

X
ஆஞ்சநேயர்

ஆஞ்சநேயர் சிறப்பு பூஜை

Namakkal | நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் பொங்கலை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

நாமக்கல் குடவரைக் கோவில்களில் குடிகொண்டுள்ள நரசிம்மர் -அரங்கநாதர் சுவாமிகளை வணங்கியபடி நகரின் மையப்பகுதியில் சுமார் 18 அடி உயரம் கொண்ட அருள்மிகு ஆஞ்சநேயர் சுவாமி அருள்பாலித்து வருகிறார்.இந்நிலையில்பொங்கல் பண்டிகை, தை மாத முதல்நாள் மற்றும் முதல் ஞாயிறு கிழமையை முன்னிட்டு, நாமக்கல் அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அதிகாலையில் நடை திறக்கப்பட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து உச்சிக் கால பூஜையில் ஆஞ்சநேயருக்கு நல்லெண்ணெய், சிகைக்காய், திருமஞ்சனம்,பால், தயிர் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.

Pongal 2023 : பொங்கல் வசூலை அள்ளியது.. நாமக்கல் ஆட்டுச்சந்தையில் இத்தனை கோடி வரை வியாபாரமா?

இதனையடுத்து, மகா தீபாரதனை நடைபெற்றது.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயரை தரிசனம் செய்ய நாமக்கல், சேலம், கரூர், ஈரோடு உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.

செய்தியாளர்: பிரதாப், நாமக்கல்.

First published:

Tags: Local News, Namakkal